3 நாட்களில் நினைத்தது நடக்க, எண் 3 ல் மறைந்திருக்கும் ரகசியத்தை நீங்களும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்! எதிர்பாராத அதிசயம் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.

number

நாம் எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராத சில விஷயங்கள் நமக்கு ஆச்சர்யத்தை தந்து விடும். அதே போல் தான் இன்று நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் இந்த மேஜிக் மெத்தட்டும். இதை நீங்கள் செய்தால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். அதுவும் மூன்றே நாட்களுக்குள். Low of Attraction என்று சொல்லுவார்கள் அல்லவா? சில எண்கள் சிலபேருக்கு எதிர்பாராத அளவு அதிர்ஷ்டத்தை கொடுத்துவிடும். அந்த வரிசையில் இந்த 369 என்ற எண்ணுக்குள் அதிர்ஷ்டம் நிறைந்துள்ளது என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இதேபோல ஒரு சக்தி வாய்ந்த வேறொரு எண் பற்றிய தகவலை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

number1

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நினைத்தது நடக்க இந்த முறையை நீங்கள் ட்ரை பண்ணி பாக்கலாம். நினைத்தது மூன்றே நாட்களில் நடக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் மூன்று நாட்களுக்கு பின்பு இதை நீங்கள் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. அப்படியே விட்டு விடுங்கள்.

ஒரு நோட்டை வாங்கி கொள்ளுங்கள். ஒரு பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நோட்டுப் புத்தகத்தில் உங்களுக்கு என்ன ஆசை இருக்கின்றதோ, என்ன கனவு இருக்கின்றதோ அது நடந்து விட்டதாக ஒரு வரியில் எழுத வேண்டும்.

number2

எடுத்துக்காட்டுக்கு உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த நோட்டுப் புத்தகத்தில் ‘எனக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது. மாதம்தோறும் என்னுடைய கைக்கு நல்ல வருமானம் வருகின்றது!’ என்று நேர்மறையாக எழுதிவிட வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய ஆசை இப்போது நிறைவேறிவிட்டது என்று நினைத்துக்கொண்டு, 333 என்ற நம்பரை 33 முறை எழுத வேண்டும். (உங்களுடைய கனவை எழுதி வைத்து இருக்கிறீர்கள் அல்லவா. அதன் கீழே இந்த நம்பரை எழுத வேண்டும்.) இந்த நம்பரை எழுதும் போது உங்களுடைய மனதில் நீங்கள் வேண்டிக் கொண்ட ஆசை நிறைவேறியதாகவே, நேர்மறையாக நினைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஆசை நிறைவேறுமா நிறைவேறாதா என்ற சந்தேகம் ஒரு துளி அளவும் உங்களுடைய மனதில் இருக்கவே கூடாது. அதேபோல் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துவிட்டு, அது இன்று நடந்து விடுமா? நாளை நடந்து விடுமா? என்று அதைப் பற்றியே நினைத்துக் கொண்டும் இருக்கவும் கூடாது.

number3

அதே நோட்டுப் புத்தகத்தில் இதேபோல் 333 என்ற நம்பரை 33 முறை, மூன்று நாட்கள் எழுத வேண்டும். அவ்வளவு தான். இந்த மூன்று நாட்களில் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதேபோல் மூன்று நாட்களும், அந்த ஆசை நிறைவேறியதாகவே மனதில் நேர்மறையாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

writing

மூன்று நாட்களில் வீடு கட்டி முடித்து விட வேண்டும். மூன்று நாட்களில் ஒரு கோடி ரூபாய் கிடைத்துவிட வேண்டும் என்று எழுதும் பட்சத்தில் அது நிச்சயமாக பலிக்காது. உங்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நிறைவேற வேண்டும் என்றால் அதை நினைத்து இந்த மெத்தடை ட்ரை பண்ணலாம்.

sucess-man

‘நான் எனக்கான புது வீட்டை கட்டி முடித்து விட்டேன். அதில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றேன்.’ என்று எழுதி அதன் பின்பு, 333 என்ற நம்பரை 33 முறை, மூன்று நாட்கள் மட்டும் இப்படி எழுதி அந்த நோட்டுப் புத்தகத்தை மூடி யார் கண்ணுக்கும் படாமல் எடுத்து வைத்துவிடுங்கள். நிச்சயமாக அந்த ஆசையும் கூடிய விரைவில் நிறைவேறும். ஆனால் அந்த ஆசை மூன்று நாட்களில் நிறைவேறாது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

handwriting

யாருக்கேனும் உடல்நிலை சரியாக வேண்டும் என்று எழுதலாம். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும். இப்படி உங்களுக்கு வாழ்க்கையில் என்ன தேவையோ அதை எழுதிப் பாருங்கள். நேர்மறை எண்ணத்தோடு நம்பிக்கையோடு மேல் சொன்ன விஷயங்களை செய்தால். நிச்சயமாக நம்ப முடியாத அதிசயத்தை உங்களுடைய வாழ்க்கையில் நடத்திக்காட்ட முடியும். ட்ரை பண்ணி பாருங்க நம்பிக்கை இருந்தால் மட்டும்.