உங்கள் கிச்சன் வேலையை பாதியாக குறைக்க நச்சுன்னு 4 டிப்ஸ் உங்களுக்காக.

pressure-cooker
- Advertisement -

சமையலறையில் பெண்களுக்கு இருக்கக்கூடிய கொஞ்சம் சிரமமான வேலைகளை எப்படி சுலபமாக மாற்றுவது என்பதைப் பற்றித்தான் இந்த குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த குறிப்புகளை தெரிந்து வைத்துக்கொண்டால், வேலையை சீக்கிரம் முடித்து விட்டு, வேறு வேலையை பார்ப்பதற்கு நேரம் மிச்சமாகும். பெண்கள் என்றால் எப்போதும் சமையலறையிலிருந்து கஷ்டப்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சமையலறையில் நீங்கள் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டாலும், பெண்களுக்கும் ஓய்வு தேவை தானே. சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் குறிப்புகளை தெரிந்து கொள்வோம்.

cooker

Tip 1:
தினமும் குக்கரில் துவரம்பருப்பை வேக வைப்பது என்பது சுலபம் தான். இருந்தாலும் மூன்றிலிருந்து நான்கு விசில் வைத்தால் தான் பருப்பு வேகும். குறிப்பாக ரேஷன் துவரம்பருப்பை வேக வைப்பதில் சில சிரமங்கள் இருக்கும். முதலில் துவரம்பருப்பை நல்ல தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைத்துவிடுங்கள். ஊற வைத்த பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக 2 ஓட்டு ஓட்டி கொள்ளுங்கள். மீண்டும் இந்த பருப்பை குக்கரில் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரே 1 விசில் போதும். பருப்பு மொழு மொழுனு சூப்பரா வெந்து இருக்கும். (மிக்ஸியில் போட்டு பருப்பை மொழு மொழுன்னு ஆட்டி விடக்கூடாது.)

- Advertisement -

Tip 2:
மீதம் ஆகாமல் சமைப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். கூடுமானவரை கட்டாயமாக எல்லோர் வீட்டிலும் ஒரு கைப்பிடி சாதம், ஒரு கழி கரண்டி குழம்பாவது மிச்சம் ஆகத்தான் செய்யும். அந்த மீதமான சாதத்தையும் குழம்பையும் பெரிய பாத்திரத்தில் இருந்து சிறிய பாத்திரத்திற்கு மாற்றி பிரிட்ஜிலோ அல்லது சமையலறையிலோ வைப்போம். அந்த பழைய சாதத்தை குழம்பை சூடு செய்ய மீண்டும் ஒரு கடாயில் ஊற்ற வேண்டும். எத்தனை பாத்திரங்களை தான் தேய்ப்பது.

double-boiling

மீதமான சாதத்தையும் குழம்பையும் டபுள் பாய்லின் மெத்தடில் சூடு செய்யுங்கள். அகலமான ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து விட்டு, அதன் உள்ளே மீதமான உணவு பொருட்களை சிறிய பாத்திரத்தோடு அப்படியே வைத்து மேலே ஒரு மூடி போட்டு விட்டால் பத்தே நிமிடத்தில் பழைய சாதம் சுடு சாதமாக மாறிவிடும். பழைய குழம்பு சூடான குழம்பாக மாறிவிடும்.

- Advertisement -

இதேபோல்தான் காலையில் போடும் டீ காபியில் அரை டம்ளர், ஒரு டம்ளர் என்று சில பேர் வீடுகளில் மிஞ்சி போகும். அதை சூடு படுத்துவதற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி சூடு செய்வதால், அந்த பாத்திரம் ஓரங்களில் சில சமயம் கருகி கூட போகும். இப்படி ஒரு டம்ளர் அரை டம்ளர் காபி டீ மீதமிருந்தால் இதையும் டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்து கொள்ளுங்கள். அதாவது சுடு தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில், டம்ளரில் இருக்கும் காபியை அப்படியே வைத்து சூடு செய்தால் 2 நிமிடத்தில் குடிக்கின்ற சூடுக்கு டீ வந்துவிடும். இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

hot-water

Tip 3:
இப்படி சூடுபடுத்த அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்த வெந்நீரை கூட நாம் வீணாக தூக்கி கீழே கொட்ட வேண்டாம். அதில் ஒரு ஸ்பூன் டெட்டால் ஊற்றி அந்த தண்ணீரில் பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப்பர் ஸ்பாச் இவைகளை போட்டு ஊற வைத்து சுத்தம் செய்தால், அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். இந்த டெட்டால் கலந்த தண்ணீரை சிங்கிள் அப்படியே கொட்டி விட்டீர்கள் என்றால் பூச்சித் தொல்லை இருக்காது.

scrubber

Tip 4:
என்னதான் சமைக்கும் போது ஜாக்கிரதையாக சமைத்தாலும் அடுப்பின் மீது குழம்பு சாதம் பொரியல் என்று கொஞ்சம் கொட்ட தான் செய்கிறது. அதையெல்லாம் துடைத்து எடுக்க துணிகளை பயன்படுத்தினால் அந்த துணியை துவைப்பது ஒருவேளை. சிறிய ஸ்பாஞ்ச் ஸ்க்ரப்பர் கிடைக்கிறது அல்லவா. அதை வாங்கி அடுப்பை துடைக்க பயன் படுத்திப்பாருங்கள். பிடி துணியை துவைக்கும் நேரம் மிச்சமாகும். பிடி துணியை சோப்பு போட்டு கசக்கி துவைப்பது கடினம். சின்ன ஸ்கரப்பரை சீக்கிரம் சுத்தம் செய்துவிடலாம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக தெரிந்தால் உங்க வீட்ல, உங்கள் சமையலறையில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -