வெறும் ஐந்தே நிமிடத்தில் அழகான அழகை கொடுக்கும் எளிமையான 5 குறிப்புகள் இதோ உங்களுக்காக.

face1
- Advertisement -

விதவிதமான ஐந்து குறிப்புகளை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். உங்களுடைய அழகுக்கு மிக மிக சீக்கிரமாக, மிக மிக எளிமையாக டக்குனு அழகை கொடுக்கக் கூடிய குறிப்புகள் தான் இவை. இந்த அழகு குறிப்புகளை தெரிந்து வச்சுக்கோங்க. தேவைப்படும்போது பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு பலன் கொடுக்கும். திடீரென்று அழகாக மாறி, திடீரென்று பார்ட்டிக்கு போகணும் பங்க்ஷனுக்கு போகணும் என்றால் அந்த இடத்தில் நீங்கள் பியூட்டி குயின் ஆக இருக்க இந்த குறிப்புகள் நிச்சயம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு பதிவிற்குள் செல்வோம்.

குறிப்பு 1:
ஒரு சிறிய பவுலில் காய்ச்சாத பச்சை பால் 1/4 – கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் தலைமுடிக்கு போடக்கூடிய ஏதாவது ஒரு ஷாம்பு, நீங்கள் எந்த பிராண்ட் ஷாம்புவை பயன்படுத்துவீர்களோ, அதை தேவையான அளவு ஊற்றி நன்றாக அடித்து கலக்கினால் நுறை பொங்கும். இப்போது இந்த பச்சை பால் கலந்த ஷாம்பூவை வைத்து தலை முடியை கசக்கி தலைக்கு குளித்தால் முடி உடனடியாக ஷைனிங்காக மாறும்.

- Advertisement -

குறிப்பு 2:
ஒரு சிறிய பௌலில் ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு அடித்து கலக்கினால் கொஞ்சம் திக்காக ஒரு ஜெல் நமக்கு கிடைக்கும். இதை தலையில் அப்ளை செய்து விட்டு 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். (தேன் போட்டால் தலைமுடி வெள்ளை எல்லாம் ஆகாது பயப்படாதீங்க.) வாரத்தில் 1 நாள் தொடர்ந்து இதை செய்து வந்தால் உங்களுடைய முடி நிரந்தரமாக எப்போதும் சைனிங்காக இருக்கும்.

குறிப்பு 3:
ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், இதை பேக்காக கலக்குவதற்கு தேவையான – தேன், இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து லேசாக மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் உடனடியாக பொலிவு பெறும்.

- Advertisement -

குறிப்பு 4:
ஒரு சிறிய பௌலில் ஆரஞ்சு பழச்சாறு – 4 டேபிள் ஸ்பூன், தேன் – 2 டேபிள் ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் ஊற்றி கலந்து இதை முகத்தில் அப்ளை செய்து – 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் உடனடியாக பொலிவு பெறும்.

குறிப்பு 5:
ஒரு சிறிய கிண்ணத்தில் தயிர் – 1 டேபிள் ஸ்பூன், பாதாம் ஆயில் – 1 ஸ்பூன், சேர்த்து நன்றாக கலந்து இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 இருந்து 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் கருமை உடனடியாக குறையும். குறிப்பாக சன் டேன் உடனடியாக நீங்கும்.

- Advertisement -