ஆரோக்கியமான தலைமுடிக்கு வீட்டில் இருக்கும் இந்த 5 பொருட்கள் இப்படி எல்லாம் கூட உதவி செய்யுமா?

- Advertisement -

தலைமுடி ஆரோக்கியம் எல்லோருக்கும் ரொம்பவும் முக்கியமானது. ஒருவருடைய தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் பொழுது உடலும் ஆரோக்கியமாகத் தான் இருக்கும் என்பது தெரியுமா? உடலுக்குள் ஏற்படும் சத்து குறைபாடு மற்றும் சில மாற்றங்களால் தலைமுடி உதிர்தலும், தலைமுடி பிரச்சனைகளும் வர துவங்குகிறது. எனவே முதலில் உங்களுடைய தலைமுடியை நீங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க வீட்டில் இருக்கும் இந்த 5 பொருட்கள் எப்படி எல்லாம் உதவி செய்யப் போகிறது? என்பதை இந்த அழகு குறிப்பு பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1
முதலாவதாக தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மற்றும் அலைபாயும் கூந்தலுக்கு ஆலுவேரா எனப்படும் கற்றாழை ஜெல் ரொம்பவே அற்புதமான பலன்களை கொடுக்கிறது. இந்த கற்றாழை மடலை பிரித்து அதில் இருந்து கிடைக்கும் வெள்ளையான சதை பற்றை நன்கு குழைத்து தலை முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக எப்பொழுதும் போல தலைக்கு குளித்து பாருங்கள், நீங்கள் கண்டிஷனர் போடவே வேண்டாம், அவ்வளவு அழகாக காற்றில் உங்களுடைய தலை முடி அலைபாயும்.

- Advertisement -

2
இரண்டாவதாக தலைமுடிக்கு நல்ல ஒரு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது முட்டை. முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கரு இரண்டுமே தலைமுடியின் சீரான வளர்ச்சிக்கும், பொடுகு பிரச்சனைக்கும் நல்ல ஒரு தீர்வை கொடுக்கக்கூடிய அற்புத மருந்தாக செயல்படுகிறது. ஆனால் சிலருக்கு மஞ்சள் கருவில் இருக்கும் ஒரு விதமான நீச்ச நாற்றம் பிடிக்காது என்பதால் வெள்ளை கருவை மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள். தலை முழுவதும் எக்பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து குளித்து பாருங்கள், பஞ்சு போல உங்களுடைய தலைமுடி வலுவாகவும், சாப்ட்டாகவும் இருக்கும்.

3
மூன்றாவதாக நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மற்றும் இழந்த முடியை மீட்டு எடுப்பதற்கு கிரீன் டீ நல்ல ஒரு பலனை கொடுக்கும். இதில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் இது உடலுக்கு உள்ளே மட்டும் அல்லாமல் தலை முடியில் இருக்கக்கூடிய சரும துளைகளுக்குள் ஊடுருவிச் சென்று மீண்டும் உதிர்ந்த இடத்திலிருந்து தலை முடியை வேகமாக வளர செய்யும் எனவே கிரீன் டீயை பவுடர் போல அரைத்து அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தலை முழுவதும் தடவி மசாஜ் செய்து உடனே தலைக்கு குளித்து விடுங்கள்.

- Advertisement -

4
நான்காவதாக நம்முடைய தலைமுடியை ஈரப்பதத்துடனும், வறண்டு போகாமலும் இருக்க செய்யக்கூடிய சத்து தயிரில் உள்ளது. கெட்டியாக இருக்கும் தயிரை தலை முழுவதும் தடவி நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். இது குளிர்ச்சியை தரும் என்பதால் சளி பிடிக்க வாய்ப்புகள் உண்டு எனவே அதிக நேரம் ஊற வைக்க வேண்டாம். அதே போல ஸ்கால்ப் பகுதிகளில் அதிகம் படும்படியும் நீங்கள் பயன்படுத்தாமல் முடியில் மட்டும் தடவி ஊற வைத்து பின்னர் அலசுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெறும் ஐந்து நிமிடம் மட்டும் இந்த பேக் உங்க முகத்தில் இருந்தா போதும், முகம் பளிங்கு போல பிரகாசமாக மாறி, உங்களையே ஆச்சரியப்படுத்தும். ட்ரை பண்ணி பாருங்க.

5
ஐந்தாவதாக ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் வினிகருடன் தேன் சேர்த்து தலையில் 10 நிமிடம் மசாஜ் செய்து பின்னர் சாதாரணமான தண்ணீரில் குளித்து விடுங்கள். மேற்கூறிய எல்லா பேக்குகளையும் நீங்கள் பத்து நிமிடத்திற்கு போட்டுக் கொண்டால் போதும், அதிகம் வேண்டாம். அதே போல இதை போடும் பொழுது சுடு தண்ணீர் அல்லது குளிர்ந்த தண்ணீர் பயன்படுத்த வேண்டாம், சாதாரண தண்ணீரே போதுமானது.

- Advertisement -