- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அட இப்படி செய்தால் போதும். சுவையான சிக்கன் குழம்பை ஐந்தே நிமிடத்தில் செய்து அசத்திடலாம்

அட இப்படி செய்தால் போதும். சுவையான சிக்கன் குழம்பை ஐந்தே நிமிடத்தில் செய்து அசத்திடலாம்

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய தலைமுறை அனைவரும் விருப்பமாக சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். இதன் சுவைக்கு உலக மக்கள் அனைவருமே அடிமையாகிவிட்டனர். அந்த அளவிற்கு கோழிக்கறியை பலரும் தங்கள் வீடுகளில் அடிக்கடி சமைத்து சாப்பிடுகின்றனர். ஆனால் நினைத்த உடனே செய்து சாப்பிடும் அளவிற்கு இந்த சிக்கன் குழம்பை எப்படி மிகவும் சுலபமாகவும் சட்டெனவும் செய்து முடிக்கலாம் என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒவ்வொரு வேலையையும் சில குறிப்பிட்ட செயல் முறைகளை பின்பற்றினால் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து முடிக்க முடியும். அவ்வாறு குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய சிக்கன் குழம்பை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

chicken

தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 4, பெரிய தக்காளி – 2, சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 2, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1, எண்ணெய் – 4 ஸ்பூன், மிளகாய் தூள் – இரண்டு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், தயிர் – 2 ஸ்பூன், எலுமிச்சை பழம் – பாதி அளவு, இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரைகிலோ சிக்கனை இரண்டு, மூன்று முறை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு மஞ்சள்தூள், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் தயிர், பாதி எலுமிச்சை பழத்தின் சாறு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, சிக்கனை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

onion-t

பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை நான்காக அரிந்து கொண்டு, அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பின் மீது வைத்து, 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் சோம்பு, சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஊறவைத்த சிக்கனை சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி பேஸ்ட்டை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

chicken-gravy1

பின்னர் இவற்றுடன் ஒன்றரை ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும்வரை வேக விட வேண்டும். பிறகு அடுப்பை அனைத்து விட்டு, குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து, கொத்தமல்லி தழைகளைத் தூவி, ஒரு முறை கலந்துவிட்டு சாதத்துடன் சேர்த்து பரிமாறி கொடுக்கலாம்.

சற்று முன்