மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சொந்த ஊர் திரும்புவதற்கு தயாராகி விடுவீர்கள். பிரிந்த சொந்த பந்தங்களை சந்திப்பீர்கள். மனமகிழ்ச்சி இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பண்டிகை வீட்டில் கலைகட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன மறதி வரலாம். கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பிரயாணம் செய்யும் போது கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய உடமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். தெரியாத நபரோடு நெருங்கி பேசி பழக வேண்டாம். கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் இன்று.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் போராட்டங்கள் வரும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின் அடைவு வரும். பயணங்களில் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். இஷ்ட தெய்வத்தை வழிபட்டு விட்டு, உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இரட்டிப்பாகும். தவறான புரிதல் கூட சரியாகும். சந்தோஷத்திற்கு குறைவு இருக்காது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக சிந்தித்து செயல்படுவீர்கள். அதே சமயம் தேவையான அளவு ஓய்வும் கிடைக்கும். சொந்த ஊர் திரும்பி விடுவீர்கள். பிரிந்த சொந்த பந்தங்களோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். மனதிற்கு ஒரு இதமான அனுபவம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று விநாயகர் வழிபாடு செய்யுங்கள். பிறகு உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தாமதத்தால் பிரச்சனை வரலாம். கவனத்தோடு இருக்க வேண்டிய நாள் இன்று.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேறும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உற்சாகம் பிறக்கும். நல்லதே நடக்கும். பட்டாசு வெடிக்கும் போது கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். சின்ன சின்ன காயங்கள் வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். புது உறவுகளின் அறிமுகம் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். காரிய தடை விலகும். தேவை இல்லாத சங்கடங்கள் விலகும். வருமான தடை நீங்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் உடல் அசதி ஏற்படாமல், ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திப்பீர்கள். சொந்த ஊரில், நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பயணங்களில் தடை வர வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். இறைவழிபாடு செய்யுங்கள். மனதை அலைபாய விட வேண்டாம். நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயம் நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று மனதிருப்தியோடு இருப்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையை வந்து சேரும். நீண்ட தூர பயணங்களால் மன அமைதி கிடைக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அனுசரணை தேவை. இன்று நிதானம் நிம்மதியை அதிகமாக உங்களுக்கு தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பரிசு கையை வந்து சேரும். சுப செலவுகள் ஏற்படும். தேவையில்லாத டென்ஷன் குறையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கூடுமானவரை பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.