இந்த ஸ்னாக்ஸ் செய்ய வெங்காயம் கூட தேவையில்லை. வீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் வைத்தே சுவையான கரமுர ஸ்னாக்ஸ் ரெசிபி செய்து விடலாம்

vadai
- Advertisement -

மாலை நேரமானாலும் சரி குளிர்காலம் ஆனாலும் சரி ஈவினிங் டீயுடன் சேர்த்து சாப்பிட ஏதாவது கரம்புற என்று இருக்கும் வீட்டில் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஸ்னாக்ஸ் செய்வது என்றாலே கூடுதல் வேலை இருக்குமே என்ற பயம் நிறைய பெண்களுக்கு இருக்கிறது. ஆனால் இதற்கு மாறாக வெங்காயம் கூட அறியாமல் சட்டென செய்துவிடும் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபியை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

french fries tamil

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – ஒரு கப், வேர்க்கடலை – அரை கப், உருளைக்கிழங்கு – 100 கிராம், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 100 கிராம் உருளைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து குக்கரில் 4 விசில் வரும்வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை தோலுரித்து, காய் துருவல் பயன்படுத்தி நன்றாக துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

potato-urulai

பின்னர் ஒரு கப் ஜவ்வரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்து, அதனை ஒரு பெரிய கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். அதன் பின் அரைத்த வேர்க்கடலையை தோல் நீக்கி விட்டு அதனையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் பதத்திற்கு அரைத்து ஜவ்வரிசியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் துருவி வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு 2 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, அரை ஸ்பூன் சீரகம் இவை மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொண்டு, அதனையும் மேற்சொன்ன கலவையுடன் கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். குறிப்பு: இவற்றுடன் தண்ணீர் சேர்க்காமல் அப்படியே கைகளை வைத்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய்

இப்பொழுது இந்த மாவிலிருந்து சிறு உருண்டையாக எடுத்து கையில் லேசாக எண்ணெய் தடவி கொண்டு மசால் வடை போல் தட்டி கொள்ள வேண்டும். இவ்வாறு மீதமுள்ள அனைத்து மாவினையும் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போன்று தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

toor-dal-vadai

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வடையை 4 அல்லது 5 ஆக எடுத்து, எண்ணெயில் சேர்த்து ஒவ்வொரு பக்கமாக திருப்பி போட்டு, நன்றாக சிவந்து வருமாறு பொரித்து எடுக்க வேண்டும். பிறகு இவ்வாறு மீதமுள்ள அனைத்து வடைகளையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான கரகரவென இருக்கும் ஸ்நாக்ஸ் ரெசிபி சட்டென தயாராகிவிட்டது. இதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னி சேர்த்து சாப்பிட்டுப்பாருங்கள். அதுவும் இந்த வடையை மாலை டீ உடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -