- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்போண்டா சாப்பிடனும்னு ஆசையா இருக்கா? வெறும் 5 நிமிடத்தில் டீ போடுற டைம்ல இந்த போண்டாவை...

போண்டா சாப்பிடனும்னு ஆசையா இருக்கா? வெறும் 5 நிமிடத்தில் டீ போடுற டைம்ல இந்த போண்டாவை செஞ்சு அசத்துங்க!

- Advertisement -

குண்டு குண்டு போண்டா என்றாலே நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும். விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் கஷ்டப்பட்டு போண்டா செய்ய வேண்டும் என்றால், அந்த போண்டாவை நம் வீட்டில் செய்யாமல் கடையில் சென்று வாங்கி சாப்பிடுவோம். வெளியில் கடையில் வாங்கும் போண்டா ஆரோக்கியமானதா, எந்த எண்ணெயில் பொரித்து, என்ற சந்தேகம் நிறைய பேருக்கு வரும். சரி எதற்கு இந்த வம்பு. நம்முடைய வீட்டிலேயே சுடச்சுட சட்டுனு ஒரு போன்றவை தயார் செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா. நீங்கள் போண்டா பிரியர்களாக இருந்தால் இன்னைக்கு ஈவ்னிங் ஸ்னாக்ஸா இந்த போண்டாவை சுட்டு தான் பாருங்களேன்.

bonda7

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மைதா – 1 கப், தயிர் – 1 கப், அரிசி மாவு – 1/2 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், சர்க்கரை – 1/4 ஸ்பூன், சமையல் சோடா – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை – தேவையான அளவு, உப்பு தேவையான அளவு எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மைதாவை எந்த கப்பில் அளந்து எடுத்துக் கொள்கிறார்களோ, அதே கப்பில் தயிர், அரிசிமாவும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் பாத்திரத்தில் ஒன்றாக போட்டு, நாம் ஊற்றி இருக்கும் தயிரிலேயே முதலில் நன்றாக விரல்களை வைத்து மாவை பிசைய வேண்டும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து மாவை அழுத்தம் கொடுக்காமல், விரல்களால் சாஃப்டாக பிசைந்து, போண்டா மாவு பக்குவத்திற்கு கொண்டு வர வேண்டும்.

mini-mysore-bonda1

அடுத்தபடியாக கடாயில் எண்ணெயை ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, காய்ந்த எண்ணெயில் இந்த போண்டாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்க வேண்டியது தான்.

- Advertisement -

அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் போண்டா மேலே கிரிஸ்பியாகவும், உள்ளே சாஃப்டாகவும் வெந்து சூப்பரான பக்கத்திலிருக்கும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அப்படி இல்லை என்றால் டொமேட்டோ சாஸ் வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய விருப்பம் தான். பக்கத்தில் சுடச்சுட ஒரு டீ.

mini-mysore-bonda2

சொல்லும்போதே அருமையாக உள்ளது. இதனுடைய சுவையும் சூப்பராக தான் இருக்கும். செய்வதற்கும் எந்த கஷ்டமும் கிடையாது. அடுப்பில் ஒரு பக்கம் டீ குடித்துக் கொண்டே இருக்க, ஒரு பக்கம் போண்டா வெந்து கொண்டு இருக்கும். அவ்வளவு தான், (எப்போதுமே போண்டா செய்வதற்கு சோடா உப்பு அவசியம் தேவை. அப்போதுதான் போண்டா கிரிஸ்பியாக சூப்பராக வரும். உங்களுக்கு இந்த சோடா உப்பு சேர்க்கு விருப்பம் இல்லை என்றால் ஒரு குழிகரண்டி புளித்த இட்லி மாவை சேர்த்துக் கொள்ளலாம்.) 5 நிமிடத்தில் சூப்பர் ஸ்னாக்ஸ் தயார். மிஸ் பண்ணாமல் உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்