- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஸ்டார் ஹோட்டலுக்கு போனாலும் இந்த ஸ்நாக்ஸை சாப்பிட முடியாது. உருளைக்கிழங்கை வைத்து ஐந்தே நிமிடத்தில் சூப்பரான...

ஸ்டார் ஹோட்டலுக்கு போனாலும் இந்த ஸ்நாக்ஸை சாப்பிட முடியாது. உருளைக்கிழங்கை வைத்து ஐந்தே நிமிடத்தில் சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி?

- Advertisement -

உருளைக்கிழங்கை வைத்து பொதுவாகவே எந்த ஸ்நாக்ஸ் செய்தாலும் அது பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும். குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். இன்னும் கொஞ்சம் நாட்களில் பள்ளிக்கூடம் திறக்கப் போகிறது. மாலை நேரத்தில் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு இப்படி சுவையாக சுலபமாக ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். ஐந்தே நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸ் செய்து அசத்தலாம். இதன் ருசி எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த ஸ்நாக்ஸ்க்கு மேலே கொஞ்சம் டொமேட்டோ சாஸ் வைத்து விட்டால் போதும். குழந்தைகள் அப்படியே மிச்சம் வைக்காமல் மாலை உணவை சாப்பிட்டு விடுவார்கள். வாங்க ருசி தரும் அந்த உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இந்த ரெசிபிக்கு நமக்கு வேகவைத்த 3 உருளைக்கிழங்கு தேவை. மீடியம் சைஸில் இருக்கும் மூன்று உருளைக்கிழங்குகளை குக்கரில் போட்டு, தேவையான அளவு உப்பு, போட்டு மூன்று அல்லது நான்கு விசில் விட்டு வேக வைத்து தோல் உரித்து அந்த உருளைக்கிழங்குகளை கட்டிகள் இல்லாமல் நன்றாக மசித்து வைத்துக் கொள்ளுங்கள். மசிப்பது சிரமமாக இருந்தால் ஒரு கேரட் துருவியில் இந்த வேக வைத்த உருளைக்கிழங்கை துருவி ஒரு பவுலில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வேகவைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கோடு சில்லி ஃபிளக்ஸ் – 1/2 ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், சாட் மசாலா – 1/2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை – 1/2 கைப்பிடி அளவு, கான்பிளவர் மாவு – 1/4 கப், தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் எதுவும் ஊற்றாமல் இதை நன்றாக பிசைய வேண்டும்.

(சில்லி பிளக்ஸ் உங்கள் வீட்டில் இல்லை என்றால் வர மிளகாயை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அது தான் சில்லி ஃபிளக்ஸ்.) சப்பாத்தி மாவு பதத்திற்கு இந்த மாவை பிசைய வேண்டும். மாவு ரொம்பவும் தளதளவென இருந்தால் இன்னும் கொஞ்சம் கான்பிளவர் மாவை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

கையில் ஒட்டாமல் இந்த மாவை அழகாக பிசைந்து தனியாக ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய கையில் கொஞ்சம் எண்ணெயை தடவி இதிலிருந்து சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து உருட்டி உள்ளங்கைகளில் வைத்து அழுத்தம் கொடுத்தால் ஒரு வட்ட வட்ட ஷேப் கிடைக்கும். இது தவிர வேறு ஏதாவது ஷேப் தேவை என்றாலும் இந்த மாவை நீங்கள் அப்படி தயார் செய்து கொள்ளலாம். எல்லா மாவையும் இப்படி உருட்டி ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்து விடுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இந்த தயார் உருளைக்கிழங்கு எல்லாம் போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் தயார் செய்த இந்த உருளைக்கிழங்கு மாவுகளை அந்த எண்ணெயில் போட்டு மிதமான தீயில் மொறு மொறுப்பாக பொறித்து எண்ணெயை வடிகட்டி வெளியே எடுத்து விடுங்கள். அவ்வளவுதான். சூப்பரான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார்.

இதையும் படிக்கலாமே: சப்பாத்தியை எப்போதும் ஒரே மாதிரி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இது மாதிரி செய்து கொடுங்க. நல்ல காரசாரமான இந்த சப்பாத்திக்கு சைட் டிஷ்யே தேவை இல்லை லஞ்ச் பாக்ஸுக்கு ஏத்த பக்கா ரெசிபி.

இதற்கு புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கு டொமேட்டோ சாஸ் மட்டுமே இருந்தால் போதும். மொறுமொறுப்பான ருசி தரும் இப்படி ஒரு ஸ்னாக்ஸை எந்த கடையில் தேடினாலும் நிச்சயமாக கிடைக்காது. அதுவும் நம்முடைய பிள்ளைகளுக்கு பிடித்தது போல நம் கையால் இப்படி ஸ்னாக்ஸ் செய்வதில் இல்லத்தரசிகளுக்கு நிச்சயம் ஒரு மனதிருப்தி இருக்கும். ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்