5 நிமிடத்தில் வாழைக்காய் வருவல் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க. கமகமக்கும் மசாலா வாசனையில் வீடே மணக்கும்.

vazhakkai-pirattal1
- Advertisement -

பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் பொரியல் செய்வதாக இருந்தால், அதில் மசாலா பொருட்கள் அதிகமாக சேர்க்காமல் தான் செய்வோம். ஆனால் வாழைக்காயை வைத்து ஐந்தே நிமிடத்தில் சுலபமாக மசாலா வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை வாழைக்காய் பிரட்டல் என்றும் சிலர் சொல்லுவார்கள். வாங்க இந்த ஈஸியான சுவையான வித்தியாசமான ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

vazhakkai-pirattal

முதலில் மீடியம் சைசில் இருக்கும் ஒரு வாழைக்காயை எடுத்து தோல் சீவி அந்த வாழைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும் எப்போதுமே பொரியலுக்கு வெட்டி வைப்போம் அல்லவா அதேபோல நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் பத்தை துண்டுகள் – 4, வர மிளகாய்- 2, தக்காளி – 1, பூண்டு பல் – 4, இந்த பொருட்களை எல்லாம் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

vazhakai-fry2

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வெட்டி வைத்திருக்கும் வாழைக்காய்களை நன்றாக தண்ணீரை வடித்து போட்டு 2 நிமிடங்கள் வறுத்து கொள்ள வேண்டும். வாழைக்காய் சிவந்து வந்தவுடன், மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கடையில் இருக்கும் வாழைக்காயோடு சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்துவிட்டு, வாழைக்காய்க்கு தேவையான அளவு உப்பு தூவி, 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு லேசாக தண்ணீர் தெளித்து 2 நிமிடங்கள் மூடி போட்டு வையுங்கள்.

- Advertisement -

இரண்டு நிமிடம் வாழைக்காய், மசாலா பொருட்களோடு சேர்ந்து வேகட்டும். அவ்வளவு தான் சூப்பரான வாழைக்காய் வறுவல் தயார். இந்த வாழைக்காய் வறுவலை ரசம் சாதம் தயிர் சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் தொட்டுக் கொள்ளலாம்.

vazhakkai-pirattal2

தக்காளியை ரொம்ப பெரிய தக்காளியாக போட்டு அரைக்க வேண்டாம். சிறிய தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள் போதும். வாழைக்காய் கடாயில் ஒட்டாத அளவுக்கு எண்ணையை கொஞ்சம் தாராளமாக ஊற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான் ரெசிப்பி நல்லா வரும். இதுவரைக்கும் இந்த ரெசிபியை யாருமே கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். மிஸ் பண்ணாம ஒரே ஒரு வாழ்க்கையில் ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

- Advertisement -