காலையில் எழுந்தவுடன் முதல் 5 நிமிடங்களில், இந்த 5 விஷயங்களை நீங்கள் செய்தால், உங்களை தோற்கடிக்க இந்த உலகத்தில் யாராலும் முடியாது.

wakeup
- Advertisement -

ஜெயிப்பதற்காக பிறந்தவர்கள், வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்தவர்கள் தினமும் காலையில் எழுந்த உடன் முதல் ஐந்து நிமிடங்களில் பின்பற்றி வந்த, ஐந்து விஷயங்களை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளையில் இருந்து 21 நாட்களுக்கு தொடர்ந்து காலையில் நீங்கள் எழுந்தவுடன் இந்த ஐந்து விஷயங்களை பின்பற்றி பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அறியாத சில மாற்றங்களை உங்களால் உணர முடியும். நீங்கள் வாழ்க்கையில் ஜெயிக்கவே பிறந்தவர்களாக மாறிவிடுவீர்கள். காலையில் நம்முடைய முதல் துவக்கம் நன்றாக இருந்து விட்டால் அதன் பின்பு வரக்கூடிய கஷ்டங்களை நாம் சுலபமாக சமாளித்து விடலாம் என்பதை உங்களுக்குள் உணர்த்த போகும் இந்த ஐந்து விஷயங்களை மிஸ் பண்ணாம தெரிஞ்சு வைச்சுக்குங்க.

sucess

முதல் விஷயம். வாழ்க்கையில் எப்போதுமே ஜெயிப்பதற்கு காரணமாக இருப்பது மனஅமைதி தான். காலையில் நீங்கள் எழுந்த முதல் நிமிடம் எதையுமே நினைக்காமல் உங்களது மூளையை அமைதியாக வைத்திருக்க வேண்டும். எல்லோருக்கும் புரியும்படி சொல்லப்போனால், காலையில் கண் விழித்த முதல் ஒரு நிமிடம் தியானம் செய்ய வேண்டும். மனதை அமைதிப்படுத்தி கொள்ள.

- Advertisement -

இரண்டாவது விஷயம். நீங்கள் உங்களது தியானத்தை ஒரு நிமிடம் முடித்துவிட்டு, இரண்டாவது நிமிடம் உங்களுக்கு தேவையான நல்லதை, நீங்களே பாசிட்டிவாக சொல்லிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டிற்கு ‘இன்று என்னுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். என்னுடைய வேலைகளை சுறுசுறுப்பாக முடிக்கப் போகிறேன். இன்று நான் கோபப்படாமல் சிரித்த முகத்தோடு இருப்பேன்’. என்று உங்களுடைய வாழ்க்கைக்கு எது தேவையோ அதை நேர்மறையாக ஒருமுறை உங்களுடைய மூளைக்கு நீங்களே சொல்லி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

meditation

மூன்றாவது விஷயம். இது மிக மிக முக்கியமான விஷயம். உங்களுக்கு அன்றைய நாளில் நடக்கப்போகும் நல்லதை நடந்துவிட்டதாக இமேஜின் செய்து கொள்ள வேண்டும். கற்பனையான காட்சி. நீங்கள் கற்பனை செய்வது அன்று உங்களுடைய வாழ்க்கையில் நிஜமாக நடக்கும். அதாவது, உங்களுக்கு நல்ல வேலைக்கான நேர்காணல் அதாவது இன்டர்வியூ இருக்கின்றது. அதற்கு நீங்கள் இன்று தயாராக செல்ல வேண்டும் என்றால், ‘நீங்கள் அந்த இன்டர்வியூவை, அட்டென்ட் பண்ணி விட்டீர்கள். இன்டர்வியூவில் செலக்ட்டும் ஆயிட்டீங்க. நிறைய சம்பளத்தில் உங்களுக்கும் வேலையும் கிடைத்து விட்டது. முடிந்தால் முதல் மாத சம்பளத்தை உங்கள் கையில் வாங்குவது போல கற்பனை செய்து கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம்’. இவ்வாறாக பாசிட்டிவாக ஒரு கற்பனை காட்சியை உங்களுடைய மனதிற்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதை உங்களுடைய மன கண்ணில் காண வேண்டும். இப்படி எது உங்களுக்கு தேவையோ அதை நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டதாக மூளைக்கு சொல்லி விடுங்கள்.

- Advertisement -

நான்காவது விஷயம். நான்காவது நிமிஷம். உடற்பயிற்சி, பெரிய அளவில் ஒரு நிமிடத்தில் எந்த உடற்பயிற்சியையும் நாம் செய்யப்போவது கிடையாது. இரவு முழுவதும் அசையாமல் இருந்த உடம்பிற்கு சில அசைவுகளை கொடுத்து உங்களுடைய உடலை பக்குவப் படுத்திக் கொள்வது தான் உடற்பயிற்சி. எழுந்து 2 குதி குதித்தாலும் அது போதும்.

wakeup1

ஐந்தாவது விஷயம். ஐந்தாவது நிமிஷம் உங்களுடைய மூளையை தூண்டும் வகையில் நமக்கு உத்வேகத்தை கொடுக்கும் வகையில் உள்ள ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் படிக்க வேண்டும். நம்மை ஊக்கப்படுத்துவதற்காக எத்தனையோ வழிகள் எத்தனையோ புத்தகங்கள் இன்று வந்து விட்டது. அதை புத்தக வடிவில் நீங்கள் ஒரு நிமிடம், ஒரு வரி வாசித்தாலும் போதும். அன்றைய நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். (ஜெயித்தவர்கள் நம்மை ஊக்குவிப்பதற்காக எழுதி இருப்பார்கள் அல்லவா அப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்).

success

இவை அனைத்தையும் காலை எழுந்த ஐந்து நிமிடத்தில் நீங்கள் செய்து முடித்திருக்க வேண்டும். இதை படிக்கும்போது உங்களுக்கு பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் தினசரி பழக்கமாக இதை மாற்றிக் கொண்டால் டக் டக் டக் என்று இதை செய்து முடித்துவிட்டு உங்களுடைய வேலையை துவங்கி பாருங்கள். பின்பு ஏற்படக்கூடிய மாற்றத்தை. மூளைக்கு முதலிலேயே உங்களுடைய அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை பதிவு வைத்து விட்டால் அதன்படி அந்த மூளை நடக்கும். எழுந்தவுடன் படிக்கையிலேயே இந்த விஷயங்களை நீங்கள் செய்யலாம். உடல் சோர்வடையவும் செய்யாது. வாழ்க்கையில் ஜெயிச்சவங்க நிறைய பேர் இதைப் பின்பற்றியே உள்ளார்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -