இந்த 5 எண்ணெய்களை ஒன்றாக சேர்த்து தலையில் தடவி வந்தாலே போதும். உங்களுடைய முடி ‘keratin hair treatment’ செய்ததுபோல மாறும்.

hair6
- Advertisement -

எந்த ஒரு கெமிக்கலும் சேர்க்காமல் நிறைய காசு செலவு செய்யாமல் வீட்டிலிருந்தபடியே முடியை சில்கி ஆக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் கேள்விபட்டிருப்போம் பியூட்டி பார்லரில் கெராடின் ட்ரீட்மென்ட் செய்தபின்பு நம்முடைய முடி சில்கி ஆக பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக மாறுகின்றது. எல்லோராலும் அவ்வளவு செலவு செய்து முடியை அழகாக மாற்றிக்கொள்ள முடியாது அல்லவா. அப்படிப்பட்டவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். தொடர்ந்து இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் உங்களுடைய முடி கூடிய சீக்கிரத்தில் சில்கி ஆக மாறிவிடும்.

முதலில் ஒரு சிறிய அளவு உள்ள பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். மூடி போட்ட பாட்டிலாக இருக்கட்டும். அதில் தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், ஃபிளக்ஸ் சீட் ஆயில் (flex seed oil) – 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 3 டேபிள்ஸ்பூன், விளக்கெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், இந்த அளவுகளில் மேல் சொன்ன 5 எண்ணெய்களையும் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த எண்ணெயில் கருஞ் சீரகம் – 1 ஸ்பூன், காய்ந்த நெல்லிக்காய் – 1 ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன், போட்டு அப்படியே எண்ணெயை மூடி இரண்டு நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும். அதாவது நாம் சேர்த்து இருக்கக்கூடிய 3 பொருட்களின் சத்தும் அந்த எண்ணெயில் நன்றாக இறங்கட்டும். அவ்வளவு தான். நமக்கு தேவையான கெராட்டின் ஆயில் தயாராகிவிட்டது.

இந்த எண்ணெயில் தண்ணீர் படாமல் ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் இரண்டு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. உள்ளே இருக்கும் பொருட்களை வடிகட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த எல்லாப் பொருட்களையும் எண்ணெயின் அடியில் தங்கிவிடும்.

- Advertisement -

இந்த எண்ணெயை தலையில் எப்படி அப்ளை செய்வது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். தேவையான அளவு எண்ணெய் எடுத்து மயிர்க்கால்களில் படும்படி தேய்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு முடியின் மேல் பக்கத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் வரை எண்ணெயை நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 1 மணி நேரம் எண்ணெய் தலையில் நன்றாக ஊறட்டும்.

அதன் பின்பு ஒரு திக்கான காட்டன் துண்டை சுடுதண்ணீரில் போட்டு நனைத்து பிழிந்து கை பொறுக்கும் சூடு இருக்கும்போது இந்த துண்டை தலையில் கட்டிக் கொள்ள வேண்டும். சூடு ஆறிய பின்பு துண்டை கழட்டி விட்டு எப்போதும் போல் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து கொள்ளலாம். தொடர்ந்து இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் உங்களுடைய முடி சைனிங் ஆக மாறும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -