உங்க பர்ஸில் எப்போதுமே இந்த பச்சை நிற பொருளை வச்சுக்கோங்க! பர்ஸில் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

purse-money

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய மணி பர்ஸில் எப்போதுமே மணி(money) நிறைந்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுடைய மனதும் நிறைந்திருக்கும். சந்தோஷமும் நிறைவாக இருக்கும். எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும், மாத கடைசியில் பர்ஸில் பத்து ரூபாய் கூட தங்காது. பணத்தை மிச்சம் பிடிக்க என்ன தான் செய்வது? அனாவசிய செலவுகளை எப்படித்தான் குறைப்பது? என்ற கேள்விகளுக்கான பதிலைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிலபேர் மாதக்கடைசியில் வெளியில் சென்றால், மற்றவர்கள் முன்னால் தங்களுடைய பர்ஸை பாக்கெட்டை விட்டு வெளியே எடுக்கவே மாட்டார்கள். அந்த அளவுக்கு கூச்சப்படுவார்கள். சுத்தமாக பர்ஸில் காசு இருக்காது. உங்களுக்காக முக்கியமாக இந்த டிப்ஸ்.

kottai-pakku

முதலில் வெள்ளிக்கிழமை தோறும் உங்களுடைய வீட்டில் பூஜை செய்யும் போது வெற்றிலை பாக்கு பழம் பூவோடு சேர்த்து இனி இந்த ஒரு பொருளையும் வையுங்கள். அது என்ன பொருள்? தேன் தான் அந்த பொருள். தேன் முழுவதுமாக சுக்கிரனின் அம்சம் பொருந்தியது. உங்களுடைய வீட்டில் மகாலட்சுமிக்கு கட்டாயம் வெள்ளிக்கிழமை பூஜையில் வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும். வெற்றிலையோடு கட்டாயம் கொட்டை பாக்கு வைக்க வேண்டும்.

அந்த கொட்டைப் பாக்கில் உள்பக்கத்தில் கொஞ்சமாக உங்களது ஆள்காட்டி விரல்களால் தேனை ஒரு சொட்டு, வைத்து விடுங்கள். இரண்டு கொட்டைப்பாக்கு பூஜைக்காக பயன்படுத்தப்படும். இரண்டு கொட்டைப்பாக்குகளிலும் தேன் தடவி வைத்து, பூஜை செய்து வாருங்கள். மூன்றே வாரங்களில் உங்களது நிதி நிலைமை மாறும் என்பதில் சந்தேகமே கிடையாது.

honey 2

சரி, இதோடு சேர்த்து உங்களுடைய மணி பர்ஸில் எதை வைத்தால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். இதற்கான பதிலையும் தெரிந்துகொள்ளலாம். இப்போதெல்லாம் 5 ரூபாய் நோட்டு அதிகமாக புழக்கத்தில் இல்லை. இருப்பினும் பச்சை நிற ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எப்போதுமே உங்களது பர்ஸில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். பச்சை நிறமும் சுக்கிரனுக்கு உரிய நிறம் தான். இந்த நிறத்தில் உள்ள ரூபாய் நோட்டு உங்களுடைய பர்சில் இருந்தால், பணத்தை ஈர்த்து கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும். செலவும் குறையும். எப்போதுமே உங்கள் வாயிலிருந்து பர்ஸில் பணம் இல்லை என்ற வார்த்தை வரவே வராது. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

கஞ்சத்தனம் பார்க்காமல் கருமி போல், எப்போதுமே பணத்தை சேர்த்து சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது. தேவையான சமயங்களில் தேவையான பொருட்களை, சந்தோஷமாக பணத்தை கொடுத்து வாங்க வேண்டும். நம்மிடமிருந்து வெளியே செல்லும் பணத்தின் மூலம் அடுத்தவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. நீங்கள் கஷ்டத்தோட அடுத்தவர்களுக்கு பணம் கொடுத்தால், அந்த பணத்தை உங்கள் கையிலிருந்து பெறுபவருக்கு கஷ்டம் வர வாய்ப்பு உண்டு.

five

நீங்கள் சந்தோஷமாக உங்கள் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்தால் தான், அந்தப் பணம் உங்கள் கைமாறி அடுத்தவர்களிடம் செல்லும்போது, அந்தப் பணம் எங்கே போய்ச் சேருகிறதோ, அவர்களுக்கும் நல்லது நடக்கும். உங்களுக்கும் நல்லது நடக்கும். எப்பப்பாத்தாலும் பணத்தை செலவு செய்யும் போது ‘ஐயோ பணம் போய்விட்டதே, போய்விட்டதே என்ற நினைப்போடு செலவு செய்து, அதிக இழப்பை தான் தரும்.’ பணம் இரட்டிப்பாக உங்கள் கைக்கு வரவேண்டும் என்றால் திருப்தியோடு செலவு செய்யுங்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பக்கத்து வீட்டுக்காரங்க தொல்லை தாங்க முடியவில்லையா? அப்படின்னா வீட்டு வாசலில் இதை கட்டி வைத்து விடுங்கள்! தொல்லை ஒழிந்து நிம்மதியாக இருக்கலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.