5000 வருடங்கள் பழமையான சிவன் கோவில் வீடியோ

Sivan temple
- Advertisement -

புராதான சின்னங்களும் பழங்கால கோவில்களும் இந்தியாவில் பல உள்ளன. இன்னும் சொல்லப்போனால் வேறெந்த நாட்டிலும் இல்லாதவகையில் பல பொக்கிஷ சின்னங்கள் நமது நாட்டில் உள்ளன. ஆனால் ஏனோ அவைகளில் பல பெரிதாக கவனிக்கப்படுவதில்லை. அந்த வகையில் 5000 வருடங்கள் பழமைவாய்ந்த ஒரு அற்புதமான சிவன் கோவிலை கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம் வாருங்கள்.
வீடியோ:

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் என்றழைக்கப்படும் இந்த கோவில் கர்நாடக மாநிலத்தில் உத்தர கனடா என்னும் மாவட்டத்தில் உள்ள கோகர்ணம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. 6 முக்தி ஸ்தலங்களுள் ஒன்றான இந்த கோவிலில் ஒரு ஆத்ம லிங்கம் உள்ளது. இந்த லிங்கமானது ராவணனால் கைலாய மலையில் இருந்து எடுத்துவரப்பட்டு இங்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த கோவிலை மயூரசர்மா என்ற அரசன் கட்டி உள்ளார். அப்பர், சம்பந்தர் ஆகியோரின் பாடல் பெற்று விளங்குகிறது இந்த ஸ்தலம். இங்கு லிங்கத்தை வைத்த ராவணன் மீண்டும் அதை எடுக்க முயலும்போது அது பசுவின் காத்து போல குழைந்ததாகவும் அதனாலேயே இது கோகர்ணம் என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. கோ என்றால் பசு என்று பொருள், கர்ணம் என்றால் காது என்று பொருள்.

இது போன்று இன்னும் ஏராளாமான கோவிலிகள் இந்தியாவில் உள்ளன. அரசாங்கம் நினைத்தால் இது போன்ற பழமை மிக்க கோவில்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நமது முன்னோர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றலாம். மக்களும் பழமை மிக்க கோயிலிற்கு சென்று பரிபூரண பக்தியில் மூழ்கலாம்.

- Advertisement -