சித்திரை மாத சுக்கிர வார வழிபாடு

sukiran mahalakshmi poojai
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கென சிறப்பு வழிபாடுகள் இருக்கும். அந்த வகையில் இந்த சித்திரையானது சூரிய பகவானின் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சித்திரை மாதத்தில் சூரிய பகவானும் சுக்கிரனும் ஒரே ராசியில் பயணம் செய்கிறார்கள்.

இதனால் சுக்கிர வழிபாடு செய்யும் பொழுது இந்த மாதத்திற்கு உரிய சந்திரனின் அருள் ஆசையோடு மகாலட்சுமி தாயாரின் அருள் ஆசியும் பெறலாம். இத்தனை நலன்களையும் பெற்றுத் தரக் கூடிய அந்த ஒரு எளிமையான வழிபாட்டு முறையை எப்படி செய்வது என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

சகல செல்வங்களையும் பெரும் சுக்கிர வார வழிபாடு

இந்த வழிபாட்டை நாளைய தினம் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹேரையில் செய்ய வேண்டும். இதை செய்ய முடிந்தவர்கள் காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள்ளான காலத்திலே செய்து விடுங்கள். ஒரு வேளை இந்த நேரத்தில் செய்ய முடியாது என்பவர்கள் இரவு எட்டிலிருந்து ஒன்பது வரையிலான காலத்தில் செய்யுங்கள்.

இந்த வழிபாடு செய்ய நாம் சில பொருட்களை வாங்க வேண்டும். அதற்கு வெள்ளை நிற பட்டிலான ஒரு சிறிய துணி, வெள்ளை நிற தாமரை பூ ஆறு, வெள்ளை நிற சம்பங்கி பூ இதை தவிர்த்து வேறு வெள்ளை நிற பூக்கள் எதுவேண்டுமாலும் போடலாம்.இத்துடன் வெற்றிலை பாக்கு பழம் போன்றவற்றை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பூஜைக்கு நமக்கு ஒரு குத்து விளக்கு கட்டாயமாக தேவை. இந்த பூஜையின் போது நெய்வேத்தியமாக கற்கண்டு சேர்த்த பொங்கல் செய்து வைக்க வேண்டும். சுக்கிரனுக்கு உகந்த நிறம் வெள்ளை. சுக்கிரனுக்குரிய எண் எனில் அது ஆறு. ஆகையால் தான் வெள்ளை நிறத்தில் அனைத்து பொருட்களையும் வாங்கி ஆறு எண்ணிக்கையிலான தாமரை மலரையும் வைத்து இந்த வழிபாடு செய்கிறோம்.

இந்த வழிபாடு செய்வதற்கு காலை 6 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். குத்து விளக்கை நன்றாக அலங்காரம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் வெள்ளை நிற பட்டிலான துணியால் முதலில் கட்டி விடுங்கள். சம்பங்கி பூவை மாலையாக தொடுத்து குத்து விளக்கு சாற்றுங்கள்.

- Advertisement -

உங்களிடம் வெள்ளை நிற ஆபரணம் இருந்தால் அதை குத்து விளக்கிற்கு சாற்றுங்கள் அல்லது வெள்ளி ஆபரணம் இருந்தால் அதையும் போடுங்கள். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தாமரை மலரில் ஒன்றை மகாலட்சுமி தாயார் படத்திற்கு வைத்து விடுங்கள். இந்த குத்து விளக்கு அருகில் மகாலட்சுமி தாயார் படத்தை வைத்து இரண்டு நெய் தீபம் ஏற்ற வேண்டும். மீதமிருக்கும் ஐந்து தாமரைப் பூவின் இதழ்களை பிரித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது மஞ்சள் விநாயகர் பிடித்து வைத்து விட்டு வழிபாட்டை துவங்க வேண்டும். நீங்கள் உதிர்த்து வைத்திருக்கும் தாமரை மலரை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு இதழாக எடுத்து விளக்குக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது மனதில் மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்வதாகவே பாவித்து கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில் கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம் போன்றவற்றை சொல்ல வேண்டும் தெரியாதவர்கள் யூடியூபில் போட்டு கேளுங்கள். இந்த வழிபாடு முடிந்த பிறகு அன்னைக்கு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து சொல்லுங்கள். இத்துடன் நாம் திருஷ்டி கழிப்பது போல இந்த குத்துவிளக்கு மகாலட்சுமி தாயார் பூஜை அறைக்கு ஆர்த்தி கலந்து திருஷ்டி கழித்து ஊற்ற வேண்டும்.

அதன் பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பகிர்த்துண்டு கொள்ளுங்கள். மறுநாள் இந்த வெள்ளை நிற துணியை மட்டும் பத்திரப்படுத்தி பீரோவில் எடுத்து வைத்து விடுங்கள். மற்றவற்றையெல்லாம் நீங்கள் எப்போதும் போல சுத்தம் செய்து விடுங்கள் அவ்வளவு தான் இந்த வழிபாடு.

இதையும் படிக்கலாமே: தங்கம் வெள்ளி சேர பூஜை

இந்த ஒரு வழிபாடு இந்த வருடம் முழுவதும் உங்களை செல்வ செழிப்புடன் வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நாளை மகாலட்சுமி தாயார் இன் அருள் ஆசியோடு சுக்கிரன் அருளையும் சந்திரனின் ஆசிர்வாதத்தையும் ஒன்றாக தரும் இந்த வழிபாட்டை செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -