7 கிழமைகளிலும் காரிய வெற்றி பெற அணிய வேண்டிய உடையின் அதிர்ஷ்ட நிறம் என்ன? இது தெரிந்தால் உங்களை வெல்ல எவராலும் முடியாது!

guru-calendar

ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு நிறத்தில் உடை அணிவதால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்கிறது ஜோதிடம். ராசி பலன்களை கூறும் பொழுது இன்றைய அதிர்ஷ்ட நிறம் என்பது எப்படி அவர்கள் ராசிக்கு உரிய அன்றைய அதிர்ஷ்டம் தரக் கூடிய நிறமாக இருக்கிறதோ! அதே போல ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு நிறத்தை அணிந்து கொள்வதால் கிடைக்கக் கூடிய காரிய வெற்றி பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

brinjal

திங்கட்கிழமை:
திங்கட்கிழமையில் வயலட் எனப்படும் கத்திரிப்பூ நிற உடைகளை அணிந்து கொள்வது அதிர்ஷ்டம் தரும். மேலும் மஞ்சள், பச்சை, சிகப்பு ஆகிய நிறங்களிலும் உடைகளை அணிந்து கொள்ளலாம். திங்கட்கிழமையில் பெண்கள் இந்நிறங்களில் வளையல் அணிந்து கொள்வது, பூக்கள் சூடிக் கொள்வது போன்றவற்றை செய்யும் பொழுது அவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். வெளியில் செல்பவர்கள் இந்த நிறத்திலான பேனாக்கள் பயன்படுத்தலாம் அல்லது ஆடைகளை அணிந்து கொண்டும் செல்லலாம்.

செவ்வாய்க்கிழமை:
பொதுவாக செவ்வாய்க் கிழமையில் சிகப்பு நிறம் கொண்ட உடைகளை அணிந்து கொள்வது அதிர்ஷ்டம் தரும் என்பது நம்பிக்கை. சிகப்பு அம்பிகைக்கு உரிய நிறம். நீங்கள் ஏதாவது ஒரு விஷயம் வெற்றி பெறுவதற்கு திங்கட்கிழமையில் செல்கிறீர்கள் என்றால் அன்றைய நாளில் சிகப்பு நிறம் கலந்த ஏதாவது நல்ல உடைகளை அணிந்து செல்லுங்கள் நிச்சயம் காரிய வெற்றி உண்டாகும். அதுபோல பெண்களாக இருக்கும் பட்சத்தில் சிகப்பு நிற வளையல்கள் அணிந்து செல்லலாம்.

puthan

புதன் கிழமை:
புதன் கிழமையில் காரிய வெற்றி பெற பச்சை நிற ஆடைகளை அணிந்து கொண்டு செல்வது ஜெயம் உண்டாக்கும். பச்சை நிறம் என்பது புத பகவானுக்கு உரிய நிறமாக இருக்கின்றது. தொழில், வியாபார விருத்தி ஏற்பட பச்சை நிற உடைகளை அணிந்து கொள்வது மிகவும் நல்லது அதிலும் புதன் கிழமையில் பச்சை நிற உடை அணிந்து கொண்டால் சிறப்பான பலன்களை பெறலாம். உடை மட்டுமல்ல பச்சை நிறத்தில் பொருட்களை பயன்படுத்தும் பொழுதும் நமக்கு அதிர்ஷ்டமான பலன்கள் தரும்.

- Advertisement -

வியாழன் கிழமை:
வியாழன் கிழமையில் மஞ்சள் நிற உடையை அணிந்து கொண்டு செல்லும் பொழுது காரிய வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை. வியாழன் குரு பகவானுக்கு உரிய கிழமையாகும். ஆகவே குருவின் அருள் பெற அன்றைய நாளில் மஞ்சள் நிற உடைகளையும் மஞ்சள் நிற பொருட்களையும் பயன்படுத்தும் பொழுது நமக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற வியாழன் கிழமையில் மஞ்சள் தரித்துக் கொள்ளுங்கள்.

sukran

வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமையில் அதிர்ஷ்டம் பெற சிவப்பு அல்லது வெள்ளை நிற உடைகளை அணிந்து கொள்ளலாம். சுக்கிர பகவானுக்கு உரிய வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானுக்கு உரிய வெள்ளை நிற உடைகளை அணிந்து கொள்ளும் பொழுது அதிர்ஷ்டம் நமக்கு தானாகவே வரும். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். வெள்ளிக்கிழமையில் பெண்கள் வெள்ளை மலர்களை சாற்றுவதும் சிகப்பு நிற உடைகளை அணிந்து கொள்வதும் அதிர்ஷ்டத்தை உண்டு பண்ணும்.

sani-baghavan

சனிக்கிழமை:
சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு உரிய நீல நிற உடைகளை அணிந்து கொள்வது அதிர்ஷ்டம் தரும். சனியின் அருள் பெற அன்றைய நாளில் நீல நிற உடைகளை அணிந்து கொள்வதும் நீல நிற செடிகளை நட்டு வளர்ப்பது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது அதிர்ஷ்டம் நமக்கு வரும். பெண்கள் சங்குப்பூ, நீலோத்பவம் போன்ற நீல நிற பூக்களை கொண்டு இறைவனுக்கு அர்ச்சிக்கும் பொழுது சனிபகவானுடைய பாதிப்புகள் குறையும்.

sun1

ஞாயிற்றுக்கிழமை:
ஞாயிற்றுக்கிழமையில் பொதுவாக எந்த நிற உடையும் நீங்கள் உடுத்திக் கொள்ளலாம். வெளிர் நிறங்கள் ஆக இருப்பது மிகவும் நல்லது. சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் பொன்நிற உடைகள் அணிவது கூடுதல் பலன்களை கொடுக்கும். மஞ்சள் அல்லது தங்க நிறத்தில் இருக்கின்ற உடைகளை அணிந்து கொள்வது அதிர்ஷ்டம் தரும்.