முடி கொட்டிய இடத்தில் 7 நாட்களில் மீண்டும் முடி வளர வேண்டும் என்றால் ஆளி விதையை தலையில் இப்படித்தான் போடணும்.

hair25
- Advertisement -

ஆளி விதை. முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய முக்கியமான பொருட்களில் இதுவும் ஒன்று. இதை ஆங்கிலத்தில் (flaxseed) ஃபிளாக் சீட் என்று சொல்லுவார்கள். இந்த ஒரு பொருளை அடிப்படையாக வைத்து தான் இந்த அழகு குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. அதிகமாக தலைமுடி உதிர்வு இருக்கிறது. ஆனால், முடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் மீண்டும் முடிகள் வளராமல் இருப்பதால் தலையில் சீக்கிரம் வழுக்கை விழக்கூடிய சூழ்நிலை. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட நாம் இந்த குறிப்பை பயன்படுத்தி பார்க்கலாம். இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நிச்சயமாக முடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் சீக்கிரம் முடிகள் வளரும். ஆளி விதையை வைத்து தலைமுடி வளர ஹேர் பேக் தயார் செய்வது எப்படி. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

ஆளி விதை அழகு குறிப்பு:
அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு சொம்பு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். 2 டேபிள்ஸ்பூன் ஆளி விதை, 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை போட்டு, 2 கொத்து கருவேப்பிலைகளை உருவி போட்டு, இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொழ கொழப்பாக வந்தவுடன் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜெல் சூடாக இருக்கும் போதே வடிகட்டி விடுங்கள்.

- Advertisement -

இப்போது வடிகட்டி வைத்திருக்கும் ஜெல்லில் 1 டேபிள் ஸ்பூன் பாதாமாயில், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி, கூடவே விட்டமின் ஈ கேப்ஸ்யூல் 1, உள்ளே இருக்கும் ஜெல்லை இதனுடன் சேர்த்து, நன்றாக அடித்து கலக்க வேண்டும். முடியவில்லை என்றால் இதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் ஊற்றி ஒரு ஓட்டு ஓட்டி எடுத்துக்கோங்க.

சூப்பரான ஜெல் கிடைக்கும். இந்த பேக்கை தலையில் அப்ளை செய்ய வேண்டும். இந்த ஜெல்லை ஒரு பஞ்சில் தொட்டு ஸ்கால்ப்பில் மசாஜ் செய்யுங்கள். கொஞ்சம் பொறுமையாக முடிகளை பாகம் பாகமாகப் பிரித்து, எல்லா வேர்க்கால்களிலும் இந்த பேக் படும் படி போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு அப்படியே தலைக்கு ஒரு கொண்டைக்கட்டி கவர் போட்டுக்கோங்க. இந்த பேக் தலையில் 20 நிமிடம் அப்படியே நன்றாக ஊறிய பிறகு, தலைக்கு குளித்துக் கொள்ளலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த பேக் போடலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த பேக் போடலாம். வாரத்தில் இரண்டு நாள் இந்த பேக் போட்டாலும் சரிதான். அது உங்கள் தலைமுடி பிரச்சனையை பொறுத்து. பேக்கை பயன்படுத்தி பாருங்கள் ஒரு சில நாட்களிலேயே முடி உதிர்வு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். பிறகு ஒரு சில வாரங்களில் முடி இல்லாத இடத்தில் கூட சின்ன சின்ன முடி வளர்ந்து இருப்பதை பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: என்ன! வழுக்கை விழுந்த இடத்தில் கூட புதிய முடிகள் முளைக்குமா? ஆமாங்க தலையில் வழுக்கையே விழுந்தா கூட கவலைப்படாமல் இதை ட்ரை பண்ணி பாருங்க. முடி நல்லா கருகருன்னு அடர்த்தியா வளரும்.

இந்த ஜெல்லை அப்படியே ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்தால் 7 நாட்களுக்கு கெட்டுப் போகாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிமையான அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -