ஏழு தலைமுறையாக நம்மை தொடர்ந்து வரும் பாவத்தைக் கூட, இந்த ஜென்மத்தில் போக்க மகா பெரியவா சொன்ன ஒரு சின்ன பரிகாரம் இதோ உங்களுக்காக.

kani-periyava
- Advertisement -

ஏழு தலைமுறைகளில் நாம் செய்த பாவக்கணக்கானது இப்பிறவியிலும் நம்மை தொடரும் என்பது சாத்திரம் கூறக்கூடிய ஒரு நம்பிக்கை. ஏழு ஜென்மத்திற்கு முன்பாக நாம் செய்த பாவம் என்ன என்பதை நம்மால் நிச்சயம் அறிய முடியாது. அறிந்தோ அறியாமலோ ஏழு ஜென்மத்தில் எந்தெந்த பிறவி எடுத்து, எந்தப் பாவத்தை செய்து விட்டோமோ. ஆனால் அந்த கர்மாவானது இன்று வரை நம்மை துரத்திக் கொண்டே வருகிறது. இந்த ஜென்மத்திலாவது செய்த பாவத்திற்கான பரிகாரத்தை தேடிக் கொள்ள முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும். மஹா பெரியவா சொன்ன இந்த சின்ன பரிகாரத்தை செய்தால்.

அன்றிலிருந்து இன்று வரை நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லித் தந்த விஷயம் நிலை வாசல் படியில் வாசல் தெளித்து அரிசி மாவால் கோலம் போட வேண்டும் என்பதுதான். எவ்வளவு தூரம் இதை வலியுறுத்தினாலும் நிறைய பேர் வெறும் அரிசி மாவில் கோலம் போடும் பழக்கத்தை வைத்துக்கொள்ள மாட்டார்கள். இன்று இந்த பதிவில் நீங்கள் படிக்கப் போகக்கூடிய ஒரு தகவலானது ‘இனி கோலம் போட்டால் அரிசி மாவால் தான் கோலம் போட வேண்டும் என்ற உறுதியை கொண்டு வந்து சேர்க்கும்.’

- Advertisement -

முதலில் ஒரு கைப்பிடி அளவு அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். (பச்சரிசியை நீங்களே மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றும் இரண்டுமாக குருணை குருணையாக அரைத்துக் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம்.) இந்த பரிகாரத்தை சனிக்கிழமை செய்வது சிறப்பு. சனிக்கிழமை காலை சூரிய உதயத்தின் போது உங்களுடைய உள்ளங்கைகளில் இந்த அரிசி மாவை வைத்துக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரத்தை முடித்துவிட்டு உங்கள் கையில் வைத்திருக்கும் அரிசி மாவை ஒரு பேப்பரிலோ கவரிலோ கொட்டிக் கொண்டு எடுத்து போய் ஏதாவது ஒரு கோவில் மரத்தடியில் இந்த அரிசி மாவை தூவி விடுங்கள். உங்களுடைய வீட்டின் அருகில் அரசமரம் இருந்தால் அங்கு உள்ள பிள்ளையார் கோயில் பக்கத்தில் கூட இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

- Advertisement -

நீங்கள் தூக்கி போட்ட இந்த அரிசி மாவை நிச்சயமாக எறும்புகள் வந்து எடுத்துச் செல்லும். நீங்கள் போட்ட ஒரு அரிசி துகளை, ஒரு எறும்பு எடுத்துச் சென்று மழைக்காலத்திற்கு உண்பதற்காக சேமித்து வைத்தால் உங்க பாவ கணக்குகள் குறிக்கப்படும். அந்த ஒரு அரிசி பருக்கையானது இரண்டரை வருடம் கெட்டுப் போகாமல் இருக்குமாம். ஒவ்வொரு மனிதனுக்கும் கிரக சூழ்நிலையானது இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை மாறுபடும்.

இரண்டரை வருடத்திற்குப் பின்பு எறும்புகள் எடுத்துச் சென்ற அந்த ஒரு பருக்கை பச்சரிசியின் குண நலனும் மாறிவிடும். எல்லோருக்கும் இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரும். ஒரு சிறிய அரிசி பருக்கை இரண்டரை வருடங்கள் வரை எப்படி கெட்டுப் போகாமல் இருக்கும். எரும்புகளின் எச்சில் பட்ட அந்த அரிசி பருக்கைக்கு இரண்டரை வருடங்கள் கெட்டுப்போகாமல் இருக்கக்கூடிய தன்மையை இயற்கையாகவே பெறும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

நீங்கள் செய்த பாவக் கணக்குகளுக்கான தண்டனை உங்கள் தலைவிதியில் எழுதி இருந்தாலும் சரி, ஒரு எறும்பு உங்கள் கையால் போட்ட பச்சரிசியை எடுத்துக் கொண்டு சென்று சேமித்து வைக்கும் போது, உங்களுக்கு கொடுக்கப்பட்ட பாவக் கணக்குகளின் தண்டனை குறையும் என்பதுதான் நம்பிக்கை.

கோவிலுக்கு சென்று தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. தினம் நாம் நிலை வாசலில் அரிசி மாவில் கோலம் போடும் போது, அந்த அரிசி மாவை எறும்புகள் வந்து எடுத்துச் செல்லும். தினம் தினம் ஒரு எறும்பானது நம் கையால் போட்ட அரிசி மாவை எடுத்துக்கொண்டு செல்லும் போது, ஏழேழு ஜென்மத்தில் நாம் செய்த பாவ கணக்குகள் ஒவ்வொன்றாக குறைய தான் செய்யும். இதற்காகத்தான் நிலை வாசலில் பச்சரிசியில் கோலம் போட வேண்டும் என்று அன்றையிலிருந்து நம்முடைய முன்னோர்கள் சொல்லி வருகிறார்கள்.

இந்த சின்ன விஷயத்தில் எவ்வளவு பெரிய சாஸ்திரத்தை நம்முடைய முன்னோர்கள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போதே பூரிப்பாகத்தான் இருக்கிறது. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -