- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval9-6-2025 நல்ல வேலை கிடைக்க முருகன் மந்திரம்

9-6-2025 நல்ல வேலை கிடைக்க முருகன் மந்திரம்

- Advertisement -

வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை எல்லோருக்கும் தாங்க இருக்கு. இருந்தாலும் நம்முடைய சூழ்நிலை, வருமானத்திற்காக சில வேலைகளை செய்துதான் ஆக வேண்டும். அது நமக்கு பிடித்த வேலையாக இருந்தாலும் சரி, பிடிக்காத வேலையாக இருந்தாலும் சரி, குடும்பத்தை நடத்திச் செல்ல பணம் அத்தியாவசியமான ஒரு பொருளாயிற்றே. என்ன செய்வது. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எந்த குறுக்கு வழியையும் அவசரப்பட்டு தேர்ந்தெடுத்து விட வேண்டாம்.

வருமானத்தை கொடுக்கும் வேலையை நேசித்து செய்யுங்கள். அந்த வேலை உங்களுக்கு பிடிக்காத வேலையாகவே இருந்தாலும் சரி, அந்த வேலையின் மூலம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நன்மை கிடைத்து விடும். இது முதல் விஷயம். வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டிய வழிபாடு, முருகர் வழிபாடு.

- Advertisement -

வரக்கூடிய ஜூன் மாதம் 9ஆம் தேதி, வைகாசி விசாகம் வரவிருக்கிறது. வைகாசி விசாகம் வர கிட்டத்தட்ட ஒரு வாரம் இருக்கிறது. இந்த ஒரு வாரத்தில் நீங்கள் முருகரை நினைத்து வேண்டி, பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை தினம் தோறும் உச்சரித்து வர, உங்களுக்கு வேலையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு கைநிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்கும். ஆசைப்பட்ட வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்தபடி நல்ல வேலை கிடைக்கும்.

ப்ரமோஷனுகாக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பிரமோஷன் கிடைக்கும். இடம் மாற்றத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து தேர்வு எழுதி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் அரசாங்க வேலை கிடைக்கும். வேலையில் உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அது சரியாக வேண்டும் என்று நாளைய தினம், செவ்வாய்க்கிழமை முருகருக்கு உகந்த கிழமை அல்லவா. நாளிலிருந்து இந்த வழிபாட்டை துவங்குங்கள். நாளையிலிருந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். வைகாசி விசாகத்தன்று முருகனை சென்று பார்க்கும் போது கையில் நல்ல வேலையோடு தான் செல்வீர்கள்.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க முருகர் வழிபாடு

நாளை காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் முருகர் திருவுருவப்படத்திற்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். முருகருக்கு இரண்டு கற்கண்டு, பேரிச்சம்பழம், வாழைப்பழம் ஏதாவது ஒரு பிரசாதம் வைத்து விட்டு இரண்டு கைகளை கூப்பி முருகரை வணங்கி இந்த மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டு, உங்களுடைய அன்றாட வேலையை துவங்குங்கள்.

பிரார்த்தனையில் ஒரு துளி சந்தேகம் கூட இருக்கக் கூடாது. முருகா உன்னை நம்பிவிட்டேன். நீ தான் எனக்கு இந்த பிரச்சனையை தீர்த்து தர வேண்டும். கைநிறைய சம்பளத்தோடு ஒரு வேலையை வாங்கி கொடுத்து விடு. என் அப்பனே, என்று உரிமையோடு கேட்டு போராடுங்கள்.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க முருகன் மந்திரம்

ராஜராஜஸகோத் பூதம்!
ராஜீவாயத லோசனம்!
ரதீசகோடி ஸௌந்தர்யம்!
தேஹிமே விபுலாம் ச்ரியம்!!

வெறும் நான்கே வரி மந்திரம் தான். மந்திரத்தை தவறாக படைத்து விடுமோ என்று எல்லாம் பயப்பட வேண்டாம். ஆரம்பத்தில் சிறுசிறு பிழைகள் வந்தாலும் தவறு கிடையாது. படிக்க படிக்க அது உங்களுக்கு பழகிவிடும். மந்திரத்தை நீங்கள் தவறாக படித்தாலும் முருகப்பெருமான் கோபித்துக் கொள்ள மாட்டார். இயன்ற அளவு முயற்சி செய்து பத்து முறை மந்திரத்தை படிக்கும் போதே உங்களுக்கு பயிற்சி ஆகிவிடும். மந்திரத்தை உச்சரிக்க சுலபமாகிவிடும்.

இதையும் படிக்கலாமே: மனக்கவலை நீங்க திங்கட்கிழமை பரிகாரம்

நம்பிக்கை உள்ளவர்கள் நாளை துவங்கி வைகாசி விசாகம் வரக்கூடிய நாள் வரை இந்த மந்திரத்தை சொல்லுப்பாருங்கள். இந்த ஒரு வார காலத்திலேயே உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் நடக்கும் நன்மைகளை கண்கூடாக பார்க்கலாம். நம்பிக்கையோடு முருகனை கும்பிட்டால் நிச்சயம் ஏமாற்றம் இல்லை என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்