- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பீன்ஸ் பொரியலை இப்படி கூட செய்யலாமா? இந்த மசாலா அரைச்சு போட்டு, இப்படி பீன்ஸ் பொரியல்...

பீன்ஸ் பொரியலை இப்படி கூட செய்யலாமா? இந்த மசாலா அரைச்சு போட்டு, இப்படி பீன்ஸ் பொரியல் செஞ்சு கொடுத்தா பீன்ஸை வெறுப்பவர்கள் கூட, விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

நார்ச்சத்து நிறைந்த இந்த பீன்ஸ் காயை வாரத்தில் ஒரு நாளாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பீன்ஸ் பொரியலை விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த மசாலா அரைத்து போட்டு பீன்ஸ் பொரியல் செய்து கொடுத்தால், பீன்ஸை கண்டால் வெறுப்பவர்கள் கூட அதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவை இருக்கும். வாங்க அந்த அருமையான ஆரோக்கியம் தரும் ரெசிபி என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

பீன்ஸ் பொரியல் செய்முறை:
முதலில் 1/4 கிலோ அளவு இலசான பீன்ஸ் எடுத்து காம்புகளை நறுக்கி நார் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். அடுத்து இதற்கு ஒரு மசாலா அரவை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் 2 கைப்பிடி அளவு, சீரகம் 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், மிளகு 10, வரமல்லி 1/2 ஸ்பூன், வர மிளகாய் 1 அல்லது 2, உங்கள் காரத்திற்கு ஏற்ப போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொரகொரப்பாக இதை அரைத்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது பீன்ஸ் பொரியலை கடாயில் தாளித்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு 1/2 ஸ்பூன், உளுந்து 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு 1/2 ஸ்பூன் போட்டு சிவக்க விட்டு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 1 கைப்பிடி அளவு போட்டு, கருவேப்பிலை ஒரு கொத்து போட்டு, நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும், வரமிளகாய் 1 அல்லது 2 உங்கள் காரத்திற்கு ஏற்ப கிள்ளி போட்டு, நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ் போட்டு மீண்டும் 2 நிமிடம் அந்த பீன்ஸை எண்ணெயில் வதக்க வேண்டும். அப்போது அதில் இருக்கும் அந்த பச்சை வாடை நீங்கிவிடும்.

- Advertisement -

அதன் பின்பு பீன்ஸுக்கு தேவையான அளவு உப்பு போட்டு, பீன்ஸ் வேகுவதற்கு தேவையான தண்ணீரை ஊற்றி ஒரு மூடி போட்டு 5 நிமிடம் வேக வையுங்கள். தண்ணீர் சுண்டி பீன்ஸ் வெந்ததும் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை பீன்ஸோடு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து, டிரையாக, இரண்டு நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்தால் சூப்பரான பீன்ஸ் பொரியல் தயார்.

இதையும் படிக்கலாமே: இந்த சின்ன சின்ன விஷயங்களை தெரிந்து கொண்டால் போதும். கோவில் மிளகு வடையை அதே ருசியில் இனி நீங்களும் உங்கள் வீட்டில் சுலபமாக செய்து விடலாம்.

தேவைப்பட்டால் இதன் மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி கொள்ளலாம். இதை சுட சுட சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம். சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட்டாலும் அருமையான சுவை இருக்கும். ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்