- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பல நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாத இனிப்பு இஞ்சி புளி ரெசிபி

பல நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாத இனிப்பு இஞ்சி புளி ரெசிபி

- Advertisement -

இனிப்பு இஞ்சி புளி செய்வது எப்படி | Inji puli recipe in Tamil

இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா விதமான சுவைகளையும் கலந்தடிக்கக் கூடிய இந்த இனிப்பு இஞ்சி புளி ரெசிபி டிபன், சாத வகைகளுக்கு தொட்டுக் கொண்டால் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் மேலும் இது உடல் ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நன்மை செய்யும் என்பதால் தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சுவையான ‘இனிப்பு இஞ்சி புளி’ ரெசிபி சுலபமாக வீட்டில் தயாரிப்பது எப்படி? என்பதை தான் இந்த பதிவில் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

புளி – ஒரு எலுமிச்சை பழம் அளவு, இஞ்சி – 200 கிராம், நல்லெண்ணெய் – ஆறு டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 15, பச்சை மிளகாய் – 4, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மிளகாய் தூள் – 3 ஸ்பூன், பொடித்த வெல்லம் – கால் கப். தாளிக்க: எண்ணெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – இரண்டு.

- Advertisement -

செய்முறை

ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவிற்கு புளியை எடுத்து சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் முழுவதுமாக புளிச்சாறு எடுக்க வசதியாக இருக்கும். பின்னர் 200 கிராம் அளவிற்கு இஞ்சியை எடுத்து மேல் தோலை நீக்கிவிட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். துண்டுகள் சிறு மிளகுகள் அளவிற்கு இருக்க வேண்டும்.

பின் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நீங்கள் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுக்க வேண்டும்.

- Advertisement -

இஞ்சி சுருள வதங்கி வரும் பொழுது பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், குட்டி குட்டியாக நறுக்கிய பச்சை மிளகாய்களை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். இவை பொன்னிறமாக நன்கு வதங்கிய பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பச்சை வாசம் போக பிரட்டி விடுங்கள். எண்ணெய் தெளிய, பச்சை வாசம் போக நன்கு வதங்கிய பின்பு நீங்கள் கெட்டியாக கரைத்து வைத்துள்ள முக்கால் கப் அளவிற்கு புளி கரைசலை வடிகட்டி சேர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இந்த மசாலா பொடி அரைத்துப் போட்டு காலிஃப்ளவர் வறுவல் செஞ்சு பாருங்க. இது என்ன கறி வறுவலா? இல்ல காலிபிளவர் வறுவலா? அப்படின்னு கேட்பாங்க.

புளி கரைசல் சேர்த்ததும் நன்கு கொதித்து வர வேண்டும். கொதித்து முக்கால் பாகம் அளவிற்கு நன்கு திக்கான பதத்திற்கு வந்ததும் பொடித்த வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை அடுப்பை குறைந்த தீயில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். கெட்டியாக திரண்டு வரும் போது தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டி அடுப்பை அணைத்து விடுங்கள். இதை ஒரு ஏர்டைட் பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சாதம் என்று எல்லாவற்றுக்கும் டேஸ்ட்டியாக இருக்கக்கூடிய இந்த இஞ்சி புளி ரெசிபி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்.

சற்று முன்