- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெறும் மூணே பொருளை வைத்து அஞ்சு நிமிஷத்துல செம டேஸ்ட்டியான சட்னியை ரெடி பண்ணிடலாம். நாலு...

வெறும் மூணே பொருளை வைத்து அஞ்சு நிமிஷத்துல செம டேஸ்ட்டியான சட்னியை ரெடி பண்ணிடலாம். நாலு நாள் ஆனாலும் கெட்டுப் போகாது. வேலைக்கு போகும் பெண்களுக்கு இந்த சட்னி ஒரு வரப் பிரசாதம் தான்

- Advertisement -

சட்னியில் பல வகைகள் இருந்தாலும் ஒவ்வொன்றும், ஒவ்வொரு சுவையில் இருக்கும். அதிலும் இந்த காரச் சட்னியிலேயே எத்தனையோ வகைகள் உண்டு. இந்த கார சட்னியை வெறும் மூன்றே பொருளை வைத்து, ஐந்தே நிமிடத்தில் மிகவும் சுலபமாக செய்து விடலாம். அது மட்டுமில்லாமல் நாலு நாள் வரையிலும் கூட கெடாமல் இந்த சட்னியை பயன்படுத்தலாம். இன்றைய கால சூழலில் வேலைக்கு போகும் பெண்களுக்கெல்லாம் இது போல சட்னி வகைகள் எல்லாம் பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த சிம்பிள் சட்னி ரெசிபியை தான் நாம் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் – 10, பூண்டு பல் – 20, பழுத்த தக்காளி – 2, உப்பு -1/4 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து.

- Advertisement -

இந்த சட்னி அரைக்க முதலில் பூண்டு தோல் உரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பூண்டு நாட்டு பூண்டாக இருந்தால் தான் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். பெரிய பூண்டை பயன்படுத்த வேண்டாம்.

செய்முறை

அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், காய்ந்த மிளகாய் அதில் சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய் கருகி விடக் கூடாது.

- Advertisement -

அதன் பிறகு அதில் பூண்டை சேர்த்து அதையும் லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து தக்காளியும் வேகும் வரை வதக்கி அடுப்பை அணைத்து விட்டு இவையெல்லாம் ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் ஆறிய தக்காளி, மிளகாய், பூண்டை சேர்த்து உப்பையும் சேர்த்து அதிக பைன் பேஸ்ட் ஆக இல்லாமல், கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும்படி அரைத்து எடுத்து ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து சின்னதாக ஒரு தாளிப்பு கரண்டி எடுத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்த பின் தாளிப்பை இந்த சட்னியில் ஊற்றி பரிமாறி விட வேண்டியது தான்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் 5 பிரெட் இருக்கா? சட்டுனு ஈசியா ரொம்பவே டேஸ்ட்டியான காரசாரமான சில்லி பிரட் இப்படி செஞ்சு பாருங்க, எல்லோருமே உங்களை பாராட்டி தள்ளிடுவாங்க!

மிக மிக எளிமையாக செய்யக் கூடிய இந்த சட்னியை நீங்கள் வீட்டில் அரைத்து வைத்துக் கொண்டால், அவசர நேரத்திற்கு சட்டென்று பயன்படுத்திக் கொள்ளலாம். கெட்டுப் போய் விடும் என்று பயப்படத் தேவையில்லை. இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமில்லாமல் அனைத்து டிபன் வகைகளுக்கும் எது நல்ல காமினேசன்.

சற்று முன்