வீட்டில் 5 பிரெட் இருக்கா? ரொம்பவே ஈசியா இப்படி சில்லி பிரட் செய்யலாம்

chilli-bread1_tamil
- Advertisement -

சில்லி பிரட் செய்வது எப்படி | Bread chilli recipe in Tamil

சிக்கன் சில்லி சாப்பிட்டு பார்த்திருப்பீங்க! ஆனால் சுவையான இந்த சைவ சில்லி இட்லி மற்றும் சில்லி பிரட் போன்றவற்றை சாப்பிட்டதுண்டா? ஒரு முறை இந்த மாதிரி பிரட் கொண்டு சில்லி பிரட் காரசாரமா ருசியா செஞ்சி பாருங்க, எல்லோருமே திரும்பத் திரும்ப கேட்டு சாப்பிடுவாங்க. என்னடா செய்வது? வாய்க்கு ஏதாவது வேண்டும்? என்று தோன்றும் பொழுது சட்டுனு பிரட் இருந்தா நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! சுவையான காரசாரமான சில்லி பிரட் ரெசிபி எளிதாக எப்படி செய்வது? அப்படின்னு இனி இந்த பதிவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

சாண்ட்விச் பிரட் – 5, சமையல் எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று, நறுக்கிய குடைமிளகாய் – ஒன்று, நறுக்கிய பச்சை மிளகாய் – இரண்டு, உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – முக்கால் ஸ்பூன், சில்லி பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன், வெங்காயத்தாள்-வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன், கான்பிளவர் மாவு – ஒன்றரை ஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

செய்முறை

பதினைந்தில் இருந்து இருபது மிளகாய்களை எடுத்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் முழுவதும் ஈர்த்ததும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதினை சில்லி பேஸ்ட் என்கிறோம்.

சில்லி பிரட் செய்முறை விளக்கம்:
சில்லி பிரட் செய்வதற்கு முதலில் பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரத்தில் இருக்கும் பகுதிகளை வெட்டி எடுத்து விடுங்கள். பின்னர் இடையில் இருக்கும் பகுதிகளை சதுர சதுரமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் விட்டு இந்த பிரட் துண்டுகளை போட்டு எல்லா புறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் மிளகளவிற்கு பொடிதாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், குடை மிளகாய் என்று வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் மிளகு தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விடுங்கள். ஒரு நிமிடம் நன்கு வதங்கியதும் வினிகர், சோயா சாஸ், சில்லி பேஸ்ட் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் வினிகர் இல்லை என்றால் அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து விடுங்கள். ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பின்பு தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
உருளைக்கிழங்கு கறி வறுவல் இப்படி மட்டும் வறுத்து வச்சுட்டா போதும், தினமுமே தயிர் சாதம் கொடுத்தா கூட சாப்பிடு வாங்க. கறி சுவையில் சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல்.

பின்னர் ஒரு முறை கலந்து விட்டு வெங்காயத்தாளுடன் கூடிய வெங்காயத்தையும் பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். பின்னர் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றி வரும் பொழுது சோள மாவுடன் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றுங்கள். தண்ணீர் எல்லாம் உறிந்து கொண்டு கிரேவி பாதத்திற்கு கெட்டியாக வரும் பொழுது, நீங்கள் வறுத்து எடுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்ட வேண்டும். மசாலா எல்லாம் அதில் உறிஞ்சிக் கொள்ளும் அளவிற்கு குறைந்த தீயில் வைத்து நன்கு கலந்து விடுங்கள். அதன் பிறகு மேலே நறுக்கிய மல்லித்தழை தூவி சுடச்சுட பரிமாறி பாருங்கள், ஆஹா!! என்று ரசித்து ருசித்து சாப்பிடுவீங்க.

- Advertisement -