- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்துணிகளில் படிந்த சாயக் கறையை போக்க, இனி கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியமே இல்லை....

துணிகளில் படிந்த சாயக் கறையை போக்க, இனி கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியமே இல்லை. ரெண்டு நிமிஷம் போதும் விடாப் பிடியான கறை கூட மாயமாய் மறைந்திடும்.

- Advertisement -

இந்த துணிகளை துவைப்பது எப்போதுமே கொஞ்சம் கடுப்பான வேலை தான். இதில் சாயம் போகும் துணி, சாயம் போகாத துணி என தனித் தனியாக பிரித்து தான் துவைக்க வேண்டியிருக்கும். அப்படி பார்த்து பார்த்து செய்தாலுமே கூட, சில நேரங்களில் துணிகளில் சாயம் படிந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு வீணாகி விடும். அந்த சாயக் கறைகளை எளிதில் எப்படி நீக்குவது என்பதை பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

துணிகளில் படிந்திருக்கும் சாயக் கறையை போக்க:
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கால் டீஸ்பூன் ஈனோ, அரை எலுமிச்சை பழம் இரண்டையும் கலந்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு துணி துவைக்க பயன்படுத்தும் லிக்விட் அரை ஸ்பூன், சேர்த்த பிறகு சாய கறை படிந்த துணியை இந்த பாத்திரத்தில் ஊற வைத்து விடுங்கள். ஐந்து நிமிடம் ஊறிய பிறகு எடுத்து லேசாக கசக்கி பாருங்கள், சாயம் படிந்த இடம் எங்கு என்று நீங்கள் தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும் அந்த அளவிற்கு பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -

இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான முறை தான் ஆனால் கவனமாக செய்ய வேண்டும். இதே போல ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கால் டீஸ்பூன் ப்ளீச்சிங் பவுடர் சேர்க்க வேண்டும். அத்துடன் அரை ஸ்பூன் எலுமிச்சை பழம், துணி துவைக்கும் லிக்விட் மூன்றையும் கலந்த பிறகு, இதையும் கொஞ்சம் கூட கட்டிகள் இல்லாமல் கலக்க வேண்டும். கட்டி இருந்தால் அது துணிகளில் பட்டு அந்த இடம் மட்டும் வெள்ளையாக மாறி விடும். எனவே கொஞ்சம் கூட கட்டிகள் இல்லாமல் கரைத்த பிறகு துணியை இதில் இரண்டு நிமிடம் ஊறி இருந்தால் போதும், உடனே எடுத்து லேசாக கசக்கினால் சாயக் கறைகள் நீங்கி விடும்.

இந்த முறை, முதலில் சொன்ன குறிப்பை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்தும் போது கொஞ்சம் கூட கட்டிகள் இல்லாமல், அதே நேரம் அதிகம் ஊற விடாமல் துவைத்தால் கறைகள் அனைத்தும் நீங்கி விடும்.

- Advertisement -

இந்த துணி துவைப்பதில் இருக்கும் மற்றொரு பெரிய பிரச்சனை வெள்ளை துணிகளில் இருக்கும் காலர் கறைகளை நீக்குவது. இதற்கும் எளிய வழிமுறை உள்ளது. ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்து கால் டீஸ்பூன் பிளிச்சிங் பவுடர்,( எலுமிச்சை பழம் சேர்க்காமல் ) லிக்விட் மட்டும் சேர்த்து, நன்றாக கலந்து இந்த தண்ணீரில் வெள்ளை சட்டை, வெள்ளை சாக்ஸ் போன்றவற்றை ஊற வைத்து கசக்கி விட்டால் போதும் கறைகள் அனைத்தும் நீங்கி விடும். இதற்கு பிரஷ் வைத்து தேய்க்க வேண்டிய அவசியம் கூட இருக்காது சட்டு என்று அழுக்கு நீங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: வாஷிங் மிஷினில் துவைத்த துணியில், இனி ஒரு சுருக்கம் கூட இருக்காது. துணி அலசும் தண்ணீரில் 1 ஸ்பூன் இந்த பொருளை சேர்த்தால், வாஷிங் மெஷினே துணிகளை அயன் செய்து கொடுத்து விடும்.

இந்த முறைகளில் துணிகளை சுத்தம் செய்தால் நீங்கள் பயன்படுத்தும் எந்த துணியிலும் இனி கறை என்பதே இருக்காது. இந்த குறிப்புகள் உங்களுக்குப் பிடித்து இருந்தால் நீங்களும் இதை ட்ரை பாருங்க.

சற்று முன்