- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இனி அடை சாப்பிடணும் ஆசைப்பட்ட பத்தே நிமிஷத்துல ரெடி பண்ணிடலாம். இதுக்காக அரிசி, பருப்பு எல்லாம்...

இனி அடை சாப்பிடணும் ஆசைப்பட்ட பத்தே நிமிஷத்துல ரெடி பண்ணிடலாம். இதுக்காக அரிசி, பருப்பு எல்லாம் ஊற வச்சு அரைக்க வேண்டிய அவசியமே இல்லை.

- Advertisement -

இட்லி தோசை போன்ற டிபன் வகைகளில் அடை தோசை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அதே நேரத்தில் நல்ல ருசியாகவும் இருக்கும். எல்லா வகை பருப்பையும், அரிசியுடன் சேர்த்து அரைத்து செய்யும் இந்த அடை தோசை ருசியுடன் சேர்த்து ஆரோக்கியமும் தரும். இந்த அடை தோசை செய்ய வேண்டும் என்றால் அரிசி, பருப்பு அனைத்தையும் ஊற வைத்து அரைத்து அதன் பிறகு தான் செய்ய முடியும். அப்படியெல்லாம் செய்யாமல் பத்து நிமிடத்தில் அடை தோசை செய்வது எப்படி என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 2கப், பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 1/4 கப், பாசிப்பருப்பு – 1/4 கப், உளுத்தம் பருப்பு -1/4 கப், துவரம் பருப்பு -1/4 கப், காய்ந்த மிளகாய் -10, சீரகம் -1/2 டீஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், மஞ்சள் -1/4 டீஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

மாவு அரைக்கும் முறை

அடை தோசைக்கு முதலில் மாவை தயார் செய்து கொள்ளலாம். இந்த அடை தோசை செய்வதற்கு அரிசி, பருப்பு இவைகளை எல்லாம் தண்ணீர் விட்டு நன்றாக அலசி சுத்தமாக வடித்து விட்டு ஈரத் துணியில் போட்டு காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும் அப்போது தான் அரைத்த இந்த அடை மாவை நீங்கள் ஸ்டோர் செய்து வைக்கும் போது கெட்டு போகாமல் இருக்கும்.

இப்போது அரிசி, பருப்பு இவைகளுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அதிக பைன் பவுடராக இல்லாமல் லேசாக கொரகொரப்பு தன்மையுடன் அரைத்து ஒரு பாக்ஸில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள் அடை மாவு தயார்.

- Advertisement -

செய்முறை

இனி நீங்கள் எப்பொழுது அடை ஊற்ற வேண்டுமானாலும், இதிலிருந்து தேவையான அளவிற்கு அடை மாவை எடுத்து, அத்துடன் வெங்காயம், கொத்த மல்லி, கருவேப்பிலை, இவைகளை பொடியாக அரிந்து மாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைத்து அப்படியே ஊற்றி விட வேண்டியது தான்.

இந்த மாவை ஒரு முறை தயார் செய்து வைத்தால் மூன்று மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது போல மாவு அரைத்து வைத்துக் கொண்டால் அவசர நேரத்தில் சட்டு என்று அடை தோசை தயார் செய்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: தேங்காய் பால், சட்னி, சாம்பார் எதுவும் வேண்டாம் மீந்து போன இடியாப்பத்தை உதிர்த்து இப்படி ஒருமுறை தாளிச்சு பாருங்க செம டேஸ்டாக இருக்குமே!

இந்த அடை தோசை மாவு ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் இது போல செய்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர நேரத்தில் சட்டு என்று செய்து விடலாம்.

சற்று முன்