- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இனி உங்க வீட்ல உப்பு கறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. வீணாக கீழே ஊற்றும்...

இனி உங்க வீட்ல உப்பு கறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. வீணாக கீழே ஊற்றும் இந்தப் பொருளை வைத்தே உப்பு கறையை சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

- Advertisement -

உப்பு கறை படிந்த பாத்ரூம், டைல்ஸ்,சிங் இதையெல்லாம் சுத்தம் செய்வது என்பது எத்தனை கடினமான காரியம் என்று அனைவருக்கும் தெரிந்தது தான். அப்படியான இந்த உப்பு கறையை எப்படி சுலபமாக சுத்தம் செய்வது என்பதை பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த உப்பு கறை படிந்த பாத்ரூமை எவ்வளவு தான் அழுத்தி தேய்த்து சுத்தம் செய்தாலுமே கூட, ஒன்று இரண்டு நாட்களிலே மறுபடியும் உப்பு கறை படிந்து விடும். இப்படி மாற தண்ணீர் தான் முக்கியமான காரணம். ஆனால் அதை நாம் மாற்ற முடியாது. பெரும்பாலும் இப்போதெல்லாம் அனைத்து இடங்களிலும் உப்பு தண்ணீர் தான் வருகிறது. எனவே தண்ணீரை மாற்றுவதை விட உப்பு கறை படித்தால் அதை எப்படி சுலபமாக சுத்தம் செய்வது என்பது என்ற தகவல் தான் நமக்கு உபயோகமாக இருக்கும். கறையை எப்படி சுத்தம் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த உப்பு கறை படிந்த பாத்ரூமை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்த போகும் பொருள் மிக மிக சாதாரணமாக அதே நேரத்தில் நாம் தேவை இல்லை என்று நினைத்து கீழே ஊற்றும் ஒன்று தான். அந்த பொருள் வேறு எதுவும் இல்லை புளித்த இட்லி மாவு தான். நாம் எப்போது மாவு அரைத்து வைத்தாலும், அதை பயன்படுத்திய பிறகு கடைசியில் அடியில் இருக்கும் மாவை கீழே தான் ஊற்றி விடுவோம். இனி அப்படி ஊற்றாமல் அந்த மாவை ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் நீங்கள் துணி துவைக்க பயன்படுத்தும் லிக்விட் அல்லது சோப் பவுடர் எதுவாக இருந்தாலும் அதை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் சேர்த்த பிறகு ரெண்டு ஸ்பூன் பெட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஆல்கஹால் தன்மை இருப்பதால் சுத்தம் செய்வதற்கு பெரிதும் உதவி செய்யும்.

மூன்றையும் நன்றாக கலந்து விட்டால் நல்ல பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும். இதை இரண்டு பாதியாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பாதியை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு பாதி அப்படியே கெட்டியாகவே இருக்கட்டும்.

- Advertisement -

கெட்டியாக இருக்கும் இந்த பேஸ்ட்டை பைப், சிங்க் போன்ற இடங்களில் எல்லாம் தேய்த்து விட்டு அதன் பிறகு பாத்திரம் தேய்க்கும் நார் வைத்து லேசாக தேய்த்துக் கொடுத்தாலே போதும். நல்ல வெண்மையாக மாறி விடும். இந்த பேஸ்ட்டை போட்டு தேய்க்க முடியாத இடங்களான பாத்ரூம் டைல்ஸ், டாய்லெட் போன்ற இடங்களில் ஸ்ப்ரே பாட்டிலில் உள்ளதை அடித்து சிறிது நேரம் கழித்து பிரஷ் வைத்து தேய்த்து விட்டால் போதும். உப்பு கறை இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய் விடும்.

இது மிக மிக எளிமையான முறை தான். நாம் தேவையில்லை என்று நினைத்து தூக்கி போட்டு ஒரு பொருளை வைத்து இவை அனைத்தையும் சுத்தம் செய்வதுடன், புதிது போல மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: இந்த சின்ன ஐடியா தெரிஞ்சிருந்தா இவ்வளவு நாள் அழுக்கு மெத்தையில் தூங்கி இருக்கவே மாட்டோமே! பல வருடங்களாக சுத்தம் செய்ய முடியாத மெத்தையை கூட, புது மெத்தை போல மாற்ற சூப்பரான ஐடியா.

இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க. உங்கள் வீட்டிலும் உப்புக் கறை இருந்த இடமே தெரியாமல் போய் விடும்.

சற்று முன்