இந்த காய்கறி வகைகளிலே உருளைக்கிழங்கு தான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த உருளைக்கிழங்கை வைத்து நாம் வீட்டில் விதவிதமாக செய்தாலும் கூட கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் ருசியாக இருக்கும். அந்த பொடிமாஸை நாம் வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 4, வெங்காயம் -1,பச்சை மிளகாய்- 4,கடுகு -1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 ஸ்பூன், சோம்பு -1 ஸ்பூன், உப்பு -1 ஸ்பூன், கருவேப்பிலை -1 கொத்து, எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி -1 கைப்பிடி.
செய்முறை
உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்ய முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து அரை உப்பு சேர்த்து வேக வைத்து தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் வெங்காயத்தையும், பச்சை மிளகாயும் நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு சேர்த்துக் கொள்ளுங்கள். கடுகு பொரிந்த உடன் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் சேர்த்து பாதி சிவந்து வரும் வரை காத்திருங்கள். அதன் பிறகு சோம்பை சேர்த்து பொரிய விடுங்கள். முதலிலேயே சோம்பு சேர்த்து விட்டால் கருகி விடும். எனவே பருப்பு பாதி அளவு வறுப்பட்டவுடன் சோம்பை சேர்த்தால் சரியாக இருக்கும்.
இப்பொழுது நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு மீதம் இருக்கும் உப்பு, மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு. வேக வைத்த உருளைக்கிழங்கை கொஞ்சம் பெரியதாக மசித்து இந்த வெங்காயத்துடன் சேர்த்து பிறகு கறிவேப்பிலையும் சேர்த்துக் கலந்து விடுங்கள்.
உருளைக்கிழங்கை சேர்த்த பிறகு 5 நிமிடம் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருந்தால் தான் உப்பு, காரம் எல்லாம் உருளைக்கிழங்கில் ஊறி நல்ல சுவையாக இருக்கும். கடைசியாக இறக்கும் பொழுது கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கல்யாண வீடு உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.
இதையும் படிக்கலாமே: தேங்காய் இருந்தா போதும் சட்டுனு 1 நிமிஷத்துல இந்த சட்னி ரெடி பண்ணிடலாம். நல்ல காரசாரமா சுருக்குன்னு இருக்க கூடிய இந்த சட்னி எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாமா!.
இந்த ரெசிபி செய்வது மிக மிக சுலபம் உருளைக்கிழங்கு வேக வைத்து எடுத்து விட்டால் போதும் 10 நிமிடத்திற்குள்ளாகவே இந்த பொடிமாஸை செய்து விடலாம். இது அனைத்து சாதத்திற்குமே நல்ல ஒரு காம்பினேஷன் தோசையில் கூட இதை வைத்து மசால் தோசைையாக சாப்பிடலாம். சுவை பிரமாதமாக இருக்கும் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.