ரொம்ப ரொம்ப சுலபமாக அருமையான ஒரு கிரேவி ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். சுட சுட சாதத்திற்கு ரசமும் இந்த கிரேவியும் இருந்தால் போதும். இந்த கிரேவியை பிசைந்து சாப்பிட்டாலே சாதத்தில் அவ்வளவு ருசி இருக்கும். சாதாரணமாக முட்டை கிரேவியை செய்து கொடுக்காமல், இந்த சண்டேக்கு இந்த ரெசிபியை முயற்சி செய்து தான் பாருங்களேன். வீட்டில் இருப்பவர்கள் எல்லோரிடமும் நிச்சயம் பாராட்டுவார்கள்.
செய்முறை
முதலில் இந்த கிரேவிக்கு ஸ்பெஷல் அரவை ஒன்று அரைக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் நறுக்கிய பெரிய வெங்காயம் 1, தோல் உரித்த பூண்டு பல் 4, இஞ்சி துண்டு 2, பச்சை மிளகாய் 2, 1/2 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை போட்டு இதையெல்லாம் விழுதாக அரைத்து மிக்ஸி ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நைசான விழுதாகத்தான் அரைக்க வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம்.
அடுத்து நான்கு, முழு முட்டைகளை தண்ணீரில் போட்டு வேக வைத்து தோல் உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து, அதில் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி, வெட்டிய முட்டைகளை அந்த எண்ணெயில் போட்டு மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொடியாக பச்சை மிளகாய் 1 தூவி முட்டைகளை அந்த எண்ணெயிலேயே லேசாக ஃப்ரை செய்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அதே கடாயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு சீரகம் 1/2 ஸ்பூன், போட்டு தாளித்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் ஊற்றி, பச்சை வாடை போக வதக்க வேண்டும். நாம் அரைத்திருக்கும் பொழுது, அரவை பச்சை நிறத்தில் இருக்கும்.
வதக்கும்போது பச்சை நிறம் மாறிவிடும். அப்போது இந்த மசாலாவில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், மல்லித்தூள் 1/2 ஸ்பூன், சீரகத்தூள் 1/4 ஸ்பூன், கரம் மசாலா 1/4 கால் ஸ்பூன், மிளகாய் தூள் 1/2 அரை ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய பூண்டு பல் 4, போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்ற வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றி விடக்கூடாது.
இதோடு கரைத்த புளித்தண்ணீரை ஒரு குழி கரண்டி ஊற்றி, 2 நிமிடம் போல கொதிக்க வையுங்கள். இது ஒரு கிரேவி பக்குவத்தில் கிடைக்கும். இதன் மேலே ஏற்கனவே மசாலா சேர்த்து வறுத்து வைத்திருக்கும் முட்டைகளை போட்டு, நன்றாக கலந்து விட்டு, இரண்டு நிமிடம் சூடேற்றி மேலே கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பை அணைத்தால் சூப்பரான தவா எக் கிரேவி தயார்.
இதையும் படிக்கலாமே: பிரியாணியே தோத்து போற அளவுக்கு சுவையான தக்காளி சாதத்தை குழையாம உதிரி உதிரியா வர இப்படி செஞ்சு பாருங்க. சூப்பரான அதே சமயம் ரொம்ப சிம்பிளான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.
இது ஒரு வித்தியாசமான சுவையில் சூப்பரான ரெசிபி. ரொம்ப ரொம்ப ஈஸி. சுவை சூப்பரா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.