பிரியாணியே தோத்து போற அளவுக்கு சுவையான தக்காளி சாதத்தை குழையாம உதிரி உதிரியா வர இப்படி செஞ்சு பாருங்க. சூப்பரான அதே சமயம் ரொம்ப சிம்பிளான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.

- Advertisement -

தக்காளி சாதம் செய்வது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான் இதில் என்ன புதிதாக இருக்கிறது என்று யோசிக்கலாம். எந்த ஒரு சமையலுமே ஒவ்வொருவர் செய்வது போதும் அதன் சுவை ஒவ்வொரு விதமாக மாறிக் கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் தக்காளி சாதத்தை பிரியாணி போலவே எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த தக்காளி சாதம் செய்வதற்கு முன்பாக ஒரு டம்ளர் அரிசியை முக்கால் பாகம் வரை வேக வைத்து வடித்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக 1 பெரிய வெங்காயம், 3 பழுத்த பெரிய தக்காளி,1பச்சை மிளகாய் இவைகளை எல்லாம் நல்ல மெலிதாக நீளவாக்கில் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது தக்காளி சாதம் தாளித்து விடலாம். அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடான உடன் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் 1 டீஸ்பூன் சோம்பு, 2 லவங்கம், 1 பட்டை, 1 பிரியாணி இலை அனைத்தையும் சேர்த்து பொறிந்த பிறகு 5 முந்திரி பருப்பையும் இத்துடன் சேர்த்து சிவந்து வந்தவுடன் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.

இந்த சமயத்தில்1கொத்து கறிவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் பாதி அளவு வதங்கிய பிறகு 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து இஞ்சி பூண்டு விழுதுதின் பச்சை வாடை போகும் வரை வதக்கி விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து விட்டு 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்,1/2 டீஸ்பூன் பிரியாணி மசாலா, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு (நீங்கள் சாதம் வடிக்கும் போது உப்பு சேர்த்து வடித்து இருந்தால் இதில் உப்பின் அளவை குறைத்து சேர்த்துக் கொள்ளுங்கள்) இவையெல்லாம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி விடுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த தக்காளியும், பச்சை மிளகாயும் சேர்த்து நன்றாக குழைந்து வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் வதங்கிய பிறகு கடைசியாக 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்த பிறகு, ஏற்கனவே முக்கால் பாகம் வரை வந்து வடித்து வைத்திருக்கும் சாதத்தை இதில் சேர்த்து கலந்து விட்டு தட்டு போட்டு இரண்டு நிமிடம் வரை அப்படியே மூடி வேக விடுங்கள். இதையெல்லாம் செய்யும் பொழுது அடுப்பு லோ ஃபிலிம் தான் இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இட்லி வேகும் நேரத்திற்குள்ளாகவே ஒரு அருமையான டிபன் சாம்பாரை சட்டுனு நிமிசத்துல ரெடி பண்ணிடலாம். டிபன் சாம்பார் இவ்வளவு சிம்பிளா கூட செய்யலாம்னு இது நாள் வரைக்கும் தெரியாம போச்சே.

இரண்டு நிமிடம் கழித்து மூடியை திறந்து கொஞ்சம் கொத்தமல்லி, புதினா இரண்டையும் பொடியாக நறுக்கி மேலே தூவி ஒரு முறை கலந்து விட்டு பரிமாறி விடுங்கள். இது தக்காளி சாதமா பிரியாணியா என்று நீங்களே குழம்பி விடுவீர்கள் அந்த அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்கும். அதே நேரத்தில் ஒட்டாமல் உதிரி உதிரியாக சாப்பிட நன்றாகவும் இருக்கும் இந்த ரெசிபியை நீங்களும் ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -