- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பல்லி விஷத்தன்மை வாய்ந்த உயிரினமா? பல்லி விழுந்த உணவு விஷமாக மாறுமா? மாறாதா? இந்த கேள்விக்கான...

பல்லி விஷத்தன்மை வாய்ந்த உயிரினமா? பல்லி விழுந்த உணவு விஷமாக மாறுமா? மாறாதா? இந்த கேள்விக்கான சரியான பதில் இதோ உங்களுக்காக.

- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு பல்லி என்று சொன்னதுமே மனதில் பயம் வந்துவிடும். ஒரு அருவருப்பான உணர்வு வந்துவிடும். இத்துனூண்டு பூச்சிக்கு மனிதர்கள் மனதில் எதற்காக இத்தனை பயம். எவ்வளவோ விஷம் நிறைந்த பூச்சி பொட்டுக்களை பார்த்தால் கூட சில மனிதர்கள் பயந்து ஓட மாட்டார்கள். ஆனால் இந்த பல்லியை பார்த்தாலே பயந்து ஓடி விடுவார்கள்.

பல்லி உடம்பில் எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன் என்பதெல்லாம் சில பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் பல்லி விழுந்த சாப்பாட்டில் விஷம் இருக்குமா? பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டால் உயிர் போகுமா? நம் வீட்டில் இருக்கும் பல்லிக்கு உடம்பில் விஷம் இருக்குதா? என்ற இந்த கேள்விக்கான பதில் சில பேருக்கு தெரியாது. இந்த கேள்விகளுக்கு உண்டான விரிவான விளக்கத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பல்லி விழுந்த உணவு விஷம் ஆகுமா?
பல்லி வகையில் இந்த உலகத்தில் கிட்டத்தட்ட 6,000 வகையான பல்லிகள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அத்தனை வகை பள்ளிகளுக்கும் உடம்பில் விஷம் கிடையாது. ஒரு சில பல்லிகளுக்கு மட்டுமே உடம்பில் விஷம் இருக்கும். ஆனால் நம்முடைய வீடுகளில் வசிக்கும் பல்லிகளின் உடம்பில் விஷம் இல்லை என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் பதிலாக இருக்கின்றது. பல்லிகளின் உடம்பில் விஷம் இல்லை. பிறகு பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டால் ஏன் வாந்தி மயக்கம் வருகிறது. ஏன் உடல் உபாதைகள் வருகிறது இதற்கு என்ன காரணம்.

பல்லி மற்ற பூச்சிகளை சாப்பிட்டு வாழக்கூடிய ஒரு உயிரினம். அதோடு மட்டுமல்லாமல் பல்லி சுத்தமான இடத்தில் தான் வசிக்கிறது என்று சொல்ல முடியாது. பல்லிகள் எந்த இடத்தில் நினைத்தாலும் செல்லும். அசுத்தமான இடங்களிலும் செல்லும். கழிவறையில் கூட பல்லிகள் நடமாட்டம் இருக்கிறது. பல்லிகள் உடம்பில் இருக்கும் கிருமி, சிறுநீர் கழிவு, மற்ற கிருமிகள் எல்லாம் சேர்ந்து சமைத்த உணவில் விழும்போது உணவு கெட்டுப் போகத்தான் செய்யும்.

- Advertisement -

அந்த உணவை நாம் சாப்பிடும் போது சில உடல் உபாதைகள் ஏற்படுவது என்பது வாஸ்தவம் தான். அதற்காக உயிர் போகும் அளவிற்கு பிரச்சனைகள் வராது என்பது மருத்துவர்களின் அறிவுரை. பல்லி என்று மட்டும் அல்ல, வேறு எந்த பூச்சு நாம் சமைத்த உணவில் விழுந்து விட்டாலும், அது கெட்டுப் போகத்தான் செய்யும். அந்த சாப்பாட்டை நாம் சாப்பிடும் போது நமக்கு உடல் உபாதைகள் ஏற்படத்தான் செய்யும்.

ஆனால், இந்த பல்லி மீது மட்டும் நமக்கு கூடுதல் பயம் உள்ளது. நிறைய பள்ளிக்கூடங்கள், நிறைய கேண்டின்கள் இப்படிப்பட்ட இடத்தில் பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டு மாணவர்கள் மயக்கம். மாணவர்களுக்கு வாந்தி பேதி என்ற செய்தியை அடிக்கடி நாம் செய்தித்தாளில் படித்து, நம்முடைய மனதில் பயம் ஆழமாக பதிந்து விட்டது.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் நிறைய சினிமாக்களில் இப்படிப்பட்ட காட்சிகள் காண்பிக்கப்படுவதால் பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டால் மரணம் நிச்சயம் என்று நாமே நினைத்துக் கொள்கிறோம். ஆனால் பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டால் உயிர் போகும் அளவுக்கு பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதேசமயம் வாந்தி தலை சுற்றல் மயக்கம் போன்ற பிரச்சனைகள் வர பல்லியின் மேல் இருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் ஒரு காரணமாக இருக்கிறது என்பதும் தான் உண்மை.

பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு, சில பேருக்கு உடல் உபாதைகள் பிரச்சனைகள் பெரும்பாலும் இருக்காது. ஆனால், நாம் சாப்பிட்ட சாப்பாட்டில் இறந்து போயிருக்கும் பல்லியை பார்த்த பின்பு, நம்மை அறியாமலேயே நமக்கு குமட்டலும் வாந்தியும் வந்துவிடும். இந்த சாப்பாட்டை நாம் சாப்பிட்டோம் என்று. பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்ட பின்பு அந்த கிருமிகள் நம் ரத்தத்தோடு கலந்து நம் உடம்பில் பாதிப்புகளை ஏற்படுவதற்கு கூட ஒரு சில மணி நேரங்கள் எடுக்கும்.

இதையும் படிக்கலாமே: புரதச்சத்து அதிகம் உள்ள கருப்பு கவுனி அரிசிக்கு மக்கள் ஏன் மாறி வருகின்றனர்? இதில் இருக்கக்கூடிய நன்மை தரும் விஷயங்கள் என்னென்ன?

ஆனால் சாப்பாட்டில் இறந்து கிடக்கும் பல்லியை பார்த்து விட்டால் நம் மனது ஒப்புமா. உடனடியாக வாந்தி வரும். நம்மை பார்த்து அந்த சாப்பாட்டை சாப்பிட்ட இன்னொருவனுக்கும் வாந்தி இப்படியே கலவரம் ஏற்பட்டுவிடும். பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டால் உடனடியாக உயிர் போய்விடுமோ பயப்படாதீங்க. சமைத்த சாப்பாட்டை சரியாக மூடி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். பல்லி மட்டுமல்ல மற்ற உயிரினங்கள் விழுந்தாலும் சாப்பாடு கெட்டுப் போகும். உடல் உபாதைகள் ஏற்படும். இப்படி பூச்சி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்