- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சப்பாத்தி திரட்டும்போதே மசாலாவை சேர்த்து இப்படி சப்பாத்தி செஞ்சி பாருங்க. சப்பாத்தியின் சுவையும் கூடும், வீட்டில்...

சப்பாத்தி திரட்டும்போதே மசாலாவை சேர்த்து இப்படி சப்பாத்தி செஞ்சி பாருங்க. சப்பாத்தியின் சுவையும் கூடும், வீட்டில் உள்ள அனைவரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

வட இந்தியர்களின் உணவில் சப்பாத்தி கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். அப்படிப்பட்ட வட இந்திய உணவான சப்பாத்தி இன்றைய காலகட்டத்தில் தென்னிந்தியாவிலும் பரவலாக உண்ணப்பட்டு வருகிறது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சப்பாத்தியை விரும்பி உண்கிறார்கள். சாதாரண சப்பாத்தி செய்து கொடுப்பதற்கு பதிலாக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்து சப்பாத்தி செய்து கொடுத்தால், அதன் பலன் இரட்டிப்பாகும். அந்த வகையில் இன்று நாம் வெஜிடபிள் சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கேரட் – 2, பீட்ரூட் – 1, பட்டாணி – கால் கப், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 6, உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி தழை – ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், சலிக்காத முழு கோதுமை மாவு – ஒரு கப், சோயா மாவு – கால் கப், கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

முதலில் மாவுகள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, அதில் உப்பை சேர்த்து தண்ணீர் தெளித்து, பிசைந்து மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இவை ஒரு மணி நேரம் அப்படியே நன்றாக ஊற வைக்க வேண்டும். அதற்குள் நாம் வெஜிடபிளை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

முதலில் கேரட்டையும், பீட்ரூட்டையும் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கேரட், பீட்ரூட், உரித்த பட்டாணி இவற்றை குக்கரில் வைத்து வேக வைக்க வேண்டும், அவை வெந்த பிறகு மத்தை வைத்து அவற்றை மசித்து விட வேண்டும். பச்சை மிளகாயையும், உப்பையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கால் ஸ்பூன் சீரகத்தை அதில் போட்டு, பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு வேகவைத்து மசித்து வைத்திருக்கும் காய்கறிகளை தண்ணீர் இல்லாமல், நன்றாக பிழிந்து விட்டு, வெங்காயத்தோடு சேர்த்து, மேலும் வதக்க வேண்டும்.

பிறகு உப்பு, மிளகாய் விழுதை அதில் சேர்க்க வேண்டும். நன்றாக கலந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இறக்கியப் பிறகு கொத்தமல்லி தழையை அதில் சேர்க்க வேண்டும். இப்பொழுது வெஜிடபிள் மசாலா தயாராகிவிட்டது.

- Advertisement -

இப்போது நாம் மீண்டும் ஒரு மணி நேரம் நன்றாக ஊறிய மாவை மறுபடியும் அடித்து பிசைய வேண்டும். அவ்வாறு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரிக்க வேண்டும். பிறகு உருண்டைகளில் உங்கள் கைவிரல் கொண்டு ஓட்டைபோட்டு அதில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் மசாலாவை சேர்த்து பிறகு அதை சப்பாத்தியாக (ஸ்டஃப் சப்பாத்தியாக) தேய்க்க வேண்டும் (மேலே உள்ளது போல).

இதையும் படிக்கலாமே: இடியாப்ப அச்சில் லேயர் பரோட்டா செய்வது எப்படி?

பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து ஸ்டஃப் செய்து வைத்திருக்கும் சப்பாத்தியை அதில் போட்டு சுட வேண்டும். தேவைப்பட்டால் அதன் மேல் எண்ணெய் தடவிக் கொள்ளலாம். மிகவும் சத்தான, சுவையான, வித்தியாசமான வெஜிடபிள் சப்பாத்தி தயார்.

சற்று முன்