- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்வீட்டில் பிசுபிசுப்பான ஜன்னலை சுத்தம் செய்வது இவ்வளவு ஈஸியா? அட்டகாசமான இந்த 10 ஹோம் டிப்ஸ்...

வீட்டில் பிசுபிசுப்பான ஜன்னலை சுத்தம் செய்வது இவ்வளவு ஈஸியா? அட்டகாசமான இந்த 10 ஹோம் டிப்ஸ் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க ஆச்சரியப்படுவீங்க!

- Advertisement -

வீட்டில் சில பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது சற்று கடினமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் ஈ, எறும்பு, கொசு தொல்லை இருக்கும் இடத்தை பராமரிப்பது கொஞ்சம் கடுப்பான காரியம் ஆகவும் இருக்கும். இது போன்ற விஷயங்களை ரொம்ப எளிதாக கையாளுவது எப்படி? என்கிற வீட்டு குறிப்பு ரகசியங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

குறிப்பு 1:
பழைய ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பொருட்களின் மங்கிய தன்மையை நீக்க சிறிதளவு வெள்ளரிக்காயை அரைத்து தேய்த்து கழுவுங்கள். புது பாத்திரம் போல பொலிவாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
பிரிட்ஜில் ஏராளமான பொருட்களை ஒன்றாக வைப்பதால் பலவிதமான வாசனைகள் ஒன்று சேர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஃப்ரிட்ஜில் இருக்கக்கூடிய துர்நாற்றத்தை நீக்க எலுமிச்சை பழத்தை பயன்படுத்திவிட்டு அதன் தோல்களை ஒரு பவுலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கலாம். அது மட்டும் அல்லாமல் கிரீன் டீ பயன்படுத்துபவர்கள் டீ பேக்கில் இருக்கக்கூடிய அதன் இலைகளை ஒரு பவுலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் மணம் கமகமன்னு இருக்கும்.

குறிப்பு 3:
செராமிக் கப்புகள் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள கறைகளை சுலபமாக நீக்குவதற்கு வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம். இதனால் செராமிக் பாதிப்பு இல்லாமல் கறைகள் மட்டும் எளிதாக நீங்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
பாத்திரம் கழுவும் சிங்க் பகுதியில் விடாப்பிடியான அழுக்குகள் ஒட்டிக் கொண்டு இருந்தால் அதை எலுமிச்சை பழத்தை கொண்டு சுத்தம் செய்து பாருங்கள். பாசி, கிருமிகள் அனைத்தும் நீங்கி புதுசு போல ஜொலிக்கும்.

குறிப்பு 5:
ஜன்னல், கதவுகளை சுத்தம் செய்வதற்கு சிறிதளவு வெங்காயத்தை பயன்படுத்தலாம். இதனால் ஜன்னல்களில் இருக்கக்கூடிய எண்ணெய் பசை கொண்ட தூசிகள் கூட எளிதாக நீங்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
வாணலியில் கருமை நீங்க இரும்பு நார் கொண்டு தேய்த்து கீறல்களை உருவாக்கி விடுவோம். கீறல்கள் எதுவும் இல்லாமல் இந்த பிரச்சனை தீர காபி தூளை பயன்படுத்தி பாருங்கள்.

குறிப்பு 7:
உங்கள் வீட்டில் இரும்பு பொருட்கள் இருந்தால் அதில் துரு உருவாகி இருக்க வாய்ப்புகள் உண்டு. இந்த துரு கறையை நீங்கள் எளிதாக நீக்குவதற்கு சிறிதளவு உருளைக்கிழங்கை வெட்டி துருப்பிடித்த இடங்களில் லேசாக தேய்த்துக் கொடுத்தால் போதும் எளிதாக நீங்கும். அல்லது உப்பு காகிதம் எனப்படும் எமரி பேப்பரையும் பயன்படுத்தலாம்.

குறிப்பு 8:
எறும்பு ஓட்டை போட்டு அதிலிருந்து வீட்டில் வந்து கொண்டிருந்தால் சிறிதளவு வெள்ளை வினிகரை ஓட்டைக்குள் ஸ்பிரே செய்து விடுங்கள். எறும்புகள் அந்த இடத்தில் மீண்டும் வராது.

குறிப்பு 9:
கொசுக்கள் அதிகமாக வீட்டில் இருந்தால் நீங்கள் வீட்டை மாப் செய்யும் பொழுது சிறிதளவு பூண்டினை இடித்து விழுதாக்கி அதை சேர்த்து கொஞ்சம் போல கலந்து கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் கலந்தால் போதும். வீடு முழுக்க கொசு பறக்கவே பறக்காது. இதன் வாசனை பிடிக்கவில்லை என்றால் பூண்டை இடித்து தண்ணீரில் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வீடு முழுவதும் அந்த தண்ணீரை தெளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பூஜை பித்தளை பாத்திரங்கள் தேய்க்க நேரமில்லையா? 2 பொருள் இருந்தா போதும் 10 நிமிடத்தில் கையே வைக்காமல் அத்தனை பித்தளை பாத்திரங்களும் பளிச்சிடும்!

குறிப்பு 10:
ஈக்கள் தொல்லை வீட்டில் அதிகம் இருந்தால் சிறு சிறு கிண்ணங்களில் கற்பூரங்களை போட்டு வீட்டில் எல்லா மூலைகளிலும் வைத்து விடுங்கள். ஈக்கள் அந்த வாசனைக்கு வரவே வராது.

சற்று முன்