பூஜை பித்தளை பாத்திரங்கள் தேய்க்க நேரமில்லையா? 2 பொருள் இருந்தா போதும் 10 நிமிடத்தில் கையே வைக்காமல் அத்தனை பித்தளை பாத்திரங்களும் பளிச்சிடும்!

pooja-items-lakshmi
- Advertisement -

பொதுவாக பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் அனைத்தும் பித்தளை உலோகத்தால் ஆனதாக இருக்க வேண்டும். செம்பு அல்லது வெள்ளியால் ஆன பூஜை பொருட்களையும் பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தக்கூடிய பித்தளை பூஜை பாத்திரங்களை தேய்ப்பதற்கு நேரம் இல்லாத சமயத்தில், ரொம்பவே சுலபமாக பத்து நிமிடத்தில் இதை செய்தால் போதும், அது என்ன? என்பதை தொடர்ந்து இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய பித்தளை பொருட்கள் மட்டும் அல்லாமல் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பித்தளை பாத்திரங்கள் அல்லது பரிசுப் பொருளாக வென்ற வெண்கல பதக்கங்கள், கோப்பைகளை கூட நீங்கள் சுத்தம் செய்வதற்கு இந்த முறையை பயன்படுத்தலாம்.

- Advertisement -

நீங்கள் சுத்தம் செய்ய இருக்கும் பித்தளை பாத்திரங்களுடன் வேறு ஏதேனும் பிளாஸ்டிக் போன்ற உலோகங்கள் இணைக்கப்பட்டு இருந்தால் அதனை ரிமூவ் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு பெரிய அளவிலான பாத்திரத்தில் முக்கால் பாகம் அளவிற்கு தண்ணீரை நிரப்பி நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் ஐந்து நிமிடத்தில் கொதிக்க ஆரம்பித்ததும் ரெண்டு டீஸ்பூன் அளவுக்கு துணி துவைக்க பயன்படுத்தும் டிடர்ஜென்ட் பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

டிடர்ஜென்ட் பவுடர் சேர்த்ததும் 5 லிருந்து 6 துண்டு எலுமிச்சை பழங்களின் உடைய தோலை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உள்ளே போடுங்கள். எலுமிச்சை முழுதாக புதிதாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை! ஏற்கனவே சாறை எடுத்து வேண்டாம் என்று தூக்கி எறியக்கூடிய இந்த தோல் பகுதியை பயன்படுத்தினால் போதும், அதில் இருக்கக்கூடிய சாறு இறங்கினாலே பாத்திரங்கள் பளிச்சிடும்.

- Advertisement -

இப்போது தண்ணீர் ஒரு கொதி நன்கு கொதித்து வந்ததும் நீங்கள் உள்ளே சுத்தம் செய்ய வேண்டிய பித்தளை பொருட்களை ஒவ்வொன்றாக போட வேண்டும். பித்தளை பூஜை பொருட்கள் இருந்தால் அதில் இருக்கக்கூடிய எண்ணெய் மற்றும் மஞ்சள், குங்குமம் போன்றவற்றை சுத்தமான துணியால் துடைத்து விடுங்கள். பின்னர் பாத்திரத்திற்குள் இந்த பொருட்களை போட்டு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள் அவ்வளவுதான்.

பிறகு தண்ணீர் ஆறும் வரை காத்திருங்கள். தண்ணீர் ஆறியதும் ஒவ்வொரு பொருட்களையும் எடுத்து எலுமிச்சை மூடியை கொண்டு லேசாக தேய்த்து கொடுங்கள். பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவி துணியால் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இதற்காக நாம் பல்வேறு பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கஷ்டப்பட்டு தேய்க்கவும் வேண்டாம். சுலபமாக இந்த முறையில் செய்து விடலாம். இந்த பாத்திரங்களை தேய்க்க நேரமில்லாத சமயங்களில் மட்டும் இது போல அவசரத்திற்கு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
ஊறுகாய், நெய், எண்ணெய் போன்ற பிசுக்கு உள்ள பாட்டில்களை கை வைக்காமல் ரொம்ப சுலபமாக சுத்தம் செய்வது எப்படி?

மேலும் எலுமிச்சைக்கு பதிலாக சிட்ரஸ் நிறைந்துள்ள சாத்துக்குடி தோல் அல்லது ஆரஞ்சு பழத்தின் உடைய தோல் போன்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆரஞ்சு தோல் பயன்படுத்தினால் இன்னும் சூப்பரான எபக்ட்டிவ் ரிசல்ட் இருக்கும். பித்தளை மட்டுமல்லாமல் செம்பினால் ஆன பொருட்களையும் இப்படி செய்யலாம். இது போல வெள்ளி பாத்திரங்களை தேய்க்க விபூதி பயன்படுத்தினால் நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும். விபூதியை கொண்டு அழுத்தம் கொடுத்து தேய்த்தாலே வெள்ளியில் இருக்கக்கூடிய கருமை நீங்கிவிடும்.

- Advertisement -