- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இட்லி மாவு இருந்தா போதும் ஈவினிங் ஸ்நாக்ஸுக்கு நல்ல ஒரு சூப்பரான இனிப்பு பணியாரம் தயார்...

இட்லி மாவு இருந்தா போதும் ஈவினிங் ஸ்நாக்ஸுக்கு நல்ல ஒரு சூப்பரான இனிப்பு பணியாரம் தயார் பண்ணிடலாம். பணியாரம் எண்ணெய் குடிக்காம இருக்க இதோட சூப்பர் டிப்ஸும் இருக்கு வாங்க தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

நம் குழந்தைகளுக்கு என்ன தான் கடையில் தின்பண்டங்களை வாங்கி கொடுத்தாலும் நம் வீட்டில் செய்து கொடுப்பதை போல ஆரோக்கியமாக இருக்காது. ஆனால் வீட்டில் செய்வதென்றால் அதற்கான பொருள்கள் எல்லாம் அந்த நேரத்தில் இருக்க வேண்டுமே என்ற கவலையும் உங்களுக்கு தோன்றுவது நியாயம் தான். வீட்டில் கொஞ்சம் இட்லி மாவு இருந்தால் கூட போதும் அதை வைத்து சூப்பரான இந்த இனிப்பு பணியாரம் செய்து விடலாம்.

செய்முறை

இந்தப் பணியாரம் செய்வதற்கு ஒரு பவுலில் மூன்று கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு அதிகம் புளிக்காத மாவாக இருந்தால் எண்ணெய்யும் அதிகமாக குடிக்காது. அடுத்ததாக இந்த மாவில் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு அனைத்தையும் சேர்த்த பிறகு நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு கப் வெல்லம் எடுத்து அந்த வெல்லம் முழுகும் வரை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து பின் வெல்லம் நன்றாக கரைந்து வரும் வரை காத்திருங்கள். வெல்லம் கரைந்த உடன் அடுப்பை அணைத்து விட்டு வெல்லப்பாகை வடிகட்டி நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் இட்லி மாவு கலவையில் இதை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இவையெல்லாம் கலந்த பிறகு மாவு நாம் இட்லி ஊற்ற தேவையான பதத்திற்கு இருக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் இந்த வெல்ல கரைசலை சேர்த்த பிறகு மாவு இளகி இருந்தால் மீண்டும் கொஞ்சம் அரிசி மாவை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். மாவு கெட்டியாக இருந்தால் தான் எண்ணெய் அதிகம் குடிக்காமல் பணியாரமும் நன்றாக உப்பி மேலே மொறு மொறு என்றும் உள்ளே பஞ்சு போன்றும் இருக்கும்.

- Advertisement -

இவை அனைத்தையும் சேர்த்த பிறகு ஒரு பின்ச் ஏலக்காய் பொடி, இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்த பிறகு மாவை நன்றாக அடித்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடுப்பில் பணியார சட்டி வைத்து சூடானவுடன் பணியாக குழியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி உடனே இந்த மாவை எடுத்து பணியாரம் சுட ஆரம்பித்து விடுங்கள். இந்த மாவை தயார் செய்த உடனே சுட்டுவிட வேண்டும் நேரமானால் மாவு நீர்த்து விடும் பணியாரம் சரியாக வராது.

இதையும் படிக்கலாமே: வாழைத்தண்டு தோசை செய்முறை விளக்கம்:(Vazhaithandu Dosai Recipe Tamil)

பணியாரம் ஒரு புறம் நன்றாக சிவந்து வந்த பிறகு மறுபுறம் திருப்பிப்போட்டு சிவந்த பிறகு எடுத்து பரிமாறுங்கள். சுடச்சுட இந்த இனிப்பு பணியரத்தில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுத்துப் பாருங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் வெல்லம் சேர்த்து இருப்பது பெரியவர்களும் கூட தாராளமாக சாப்பிடலாம். அந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்களும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்