- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வாரத்தில் ஒரு முறையாவது இப்படி தோசை சுட்டு சாப்பிட்டு பாருங்க. இது தெரியாம ஆயிரக்கணக்கில் பணத்தை...

வாரத்தில் ஒரு முறையாவது இப்படி தோசை சுட்டு சாப்பிட்டு பாருங்க. இது தெரியாம ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு பண்ணட்டோம்மேன்னு நினைக்கிற அளவுக்கு ரொம்பவே ஆரோக்கியமான தோசை ரெசிபி.

- Advertisement -

இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான். நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விடவும் முடியும். அப்படியான ஒரு ரெசிபி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

இப்போது இந்த பதிவில் நாம் மிகவும் ஆரோக்கியமான வாழைத்தண்டு தோசை எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்போது பெரும்பாலானவர்கள் இருக்கும் சிறுநீரக கல் பிரச்சனைக்கு வாழைத்தண்டு ஒரு அருமருந்து. ஆனால் வாழைதண்டை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இது போல தோசையாக செய்து கொடுத்தால் அனைவரையுமே விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

செய்முறை

இதற்கு ஒரு சிறிய துண்டு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி அலசி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் அரை டீஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், என அனைத்தையும் சேர்ந்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பவுலில் மூன்று கப் இட்லி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வெங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை இரண்டையும் நல்ல பொடியாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் நாம் ஏற்கனவே அரைத்து வைத்த வாழைத்தண்டு பேஸ்டையும் சேர்த்து அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். இந்த தோசை கொஞ்சம் தடிமனாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். எனவே அதற்கு ஏற்றார் போல் மாவை கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பை பற்ற வைத்து தோசை கல் சூடானவுடன் மாவை ஊற்றிய பிறகு அடுப்பை லோ பிளேமில் வைத்து தோசையை மூடி போட்டு வேக விடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து தோசையை திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி மேலும் ஒரு நிமிடம் சிவக்க விட்டு எடுத்து விடுங்கள். சுவையான வாழைத் தண்டு தோசை தயார்.

இதில் வாழைத்தண்டு சேர்த்து இருப்பது நீங்களே சொன்னால் தான் தெரியும். அந்த அளவிற்கு வாழைத்தண்டின் வாடையே வராமல் இருக்கும். இது மிகவும் சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய சூப்பரான தோசை ஒரு ரெசிபி. இதற்கு சட்னி சாம்பார் என நீங்கள் எப்போதும் சைடிஷ் ஆக பயன்படுத்தும் எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: மிளகாய் சேர்க்காத காரச் சட்னி அரைப்பது எப்படி

மருத்துவத்திற்காக ஆயிர கணக்கில் செலவு செய்யும் நாம் இது போல உணவு வகைகளை எடுத்துக்கொண்டால் போதும். நோய் நொடியின்றி வாழலாம்.

சற்று முன்