- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சட்டுனு 10 நிமிடத்தில் மணக்க மணக்க கேரட் சாதம், இவ்வளவு வாசமாக, ருசியாக, ஆரோக்கியமாக யாராலும்...

சட்டுனு 10 நிமிடத்தில் மணக்க மணக்க கேரட் சாதம், இவ்வளவு வாசமாக, ருசியாக, ஆரோக்கியமாக யாராலும் செய்ய முடியாது. லஞ்ச் பாக்ஸுக்கு இது ஒரு சூப்பர் ரெசிபிங்க.

- Advertisement -

எப்ப பாத்தாலும் குழம்பு சாப்பிட்டு போர் அடிக்குதா. குழம்பு வைக்க நேரம் இல்லையா. வீட்டில் கேரட், குடைமிளகாய், இருந்தால் சட்டென இந்த சாதத்தை செய்து சாப்பிடுங்கள். மணக்க மணக்க வாசத்தோடு, நாவிற்கு ருசியோடு, ஆரோக்கியத்தோடு செய்யக்கூடிய ரெசிபி இது. ஒரு பத்து நிமிடம், நேரம் இருந்தால் கூட இதை செய்து விடலாம். ஆனால் வடித்த சாதம் உங்களிடம் இருக்க வேண்டும். மீதமான பழைய சாதத்திலும் இதை செய்யலாம். ஒரே ஒரு கண்டிஷன் சாதம் உதிரி உதிரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு வடித்த சாதத்தை எடுத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கேரட்டை எடுத்து தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளுங்கள். பாதி குடை மிளகாயை ஓரளவுக்கு சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், பட்டை – 1 சின்ன துண்டு, கிராம்பு – 1, ஏலக்காய் – 1, கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, போட்டு எல்லாவற்றையும் நன்றாக வறுத்து விடுங்கள்.

இந்த பொருட்கள் எல்லாம் சிவந்து வந்தவுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/2 கைப்பிடி அளவு போட்டு, நறுக்கிய பச்சை மிளகாய் – 1 போட்டு, வதக்கி விடவும். வெங்காயம் கொஞ்சம் நிறம் மாறி வரட்டும். அதுவரைக்கும் காத்திருங்கள். அடுத்தபடியாக கேரட் துருவல், வெட்டிய குடைமிளகாயை, போட்டு எண்ணெயிலேயே வதக்குங்கள்.

- Advertisement -

இந்த காய்கறிகளும் மற்ற பொருட்களுக்கும் தேவையான அளவு உப்பு தூளை தூவி வதக்கும்போது காய்கறிகள் பாதி அளவு வெந்து வரும். இரண்டு நிமிடம் வதக்கி விட்டால் போதும். (சாதத்தை சாப்பிடும்போது காய்கறிகள் வெடுக் வெடுக் என இருந்தால் கொஞ்சம் ருசியாகத்தான் இருக்கும். தேவைப்பட்டால் நீங்கள் கொஞ்சம் மூடி போட்டு காய்களை வேக வைத்துக் கொள்ளலாம்.)

அடுத்தபடியாக நல்ல வாசனைக்கும் லேசான காரத்திற்கும் சாம்பார் பொடி – 1 ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வதக்கி விடவும். அடுத்து உதிரி உதிரியாக வடித்து இருக்கும் சாதத்தை இதோடு சேர்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டில் 1 கப் ஜவ்வரிசி இருந்தா போதும் அசத்தலான சுவையில் 10 நிமிடத்தில் இப்படி லட்டு தயாரிக்கலாமே!

சாதத்தை மசாலா பொருட்களோடு நன்றாக கலந்து விட்டு, சாதம் சூடாகி வந்ததும் இறுதியாக கொத்தமல்லி தலையை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு மூடி போட்டு இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். மூடியை திறக்கும் போது நல்ல வாசம் இருக்கும். சுட சுட இதை ஒரு வத்தல் அல்லது சிப்ஸ்சோடு பரிமாறினாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹெல்தியான சாப்பிட்டை வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். குறிப்பாக இதை லஞ்ச் பாக்ஸுக்கு கட்டிக் கொடுத்தால் சூப்பராக இருக்கும். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்