எவ்வளவோ வகை வகையான காய்கறிகள் இருந்தாலும், இந்த கத்தரிக்காய் முருங்கைக்காயை அடித்துக் கொள்ள வேறு காம்பினேஷனே கிடையாது. கத்தரிக்காய் முருங்கைக்காய் சேர்த்து சாம்பார், பொரியல், கார குழம்பு இப்படி வைப்போம். ஆனால் இன்று புதுவிதமான ஒரு குழம்பு ரெசிபியை பார்க்க போகின்றோம். இதில் பருப்பு, புளி, எதுவுமே சேர்க்கப் போவது கிடையாது. மிக மிக எளிமையான முறையில் சுடச்சுட இந்த குழம்பும் சாதமும் இருந்து விட்டால் போதும். ஒரு குண்டால் சாதத்தை சாப்பிட்டு விடலாம். வாங்க இந்த இன்ட்ரஸ்டிங்கான ரெசிபி யை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.
செய்முறை
அடுப்பில் முதலில் ஒரு கடாயை வைத்து 4 லிருந்து 5 டேபிள் ஸ்பூன் எண்ணெயை தாராளமாக ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 50 கிராம், பூண்டு – 6 பல் தோல் உரித்தது, போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். பிறகு கருவேப்பிலை ஒரு கொத்து போடவும். நறுக்கிய கத்தரிக்காய் முருங்கைக்காய் சேர்த்து – 1/4 கிலோ போட்டு எண்ணெயிலேயே இரண்டு நிமிஷம் வதக்குங்கள்.
அடுத்து மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், கறி மசாலா தூள் – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு இந்த மசாலா கருகாமல் 30 செகண்ட் வரை வதக்கி உடனடியாக மிக்ஸி ஜாரில் அரைத்த 4 தக்காளி பழம் விழுதை இதில் ஊற்றவும்.
தண்ணீர் ஊற்றக்கூடாது. தக்காளி பழத்தின் பச்சை வாடை போகும் வரை இதை வதக்குங்கள். (காய் இதோடு சேர்ந்து நன்றாக வதங்கி வேகட்டும்.) எண்ணெய் பிரிந்து மேலே வரும் அப்போது, அரைத்த தேங்காய் அரைவையை – 1/2 கப் அளவு இதில் ஊற்ற வேண்டும். (1/2 மூடி தேங்காயை துருவி, மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைசாக விழுதாக அரைத்து இதில் ஊற்ற வேண்டும்.) இப்பவும் தண்ணீர் ஊற்றக்கூடாது. தக்காளியில் தண்ணீர் விட்டு இருக்கும்.
நாம் அறைத்து ஊற்றி இருக்கும் தேங்காய் அரவை இவை எல்லாவற்றையும் நன்றாக இரண்டு நிமிடம் போல வதக்கி விட்டு கிரேவிக்கு தேவையான அளவு, தண்ணீரை ஊற்றி ஒரு மூடி போட்டு காயை வேக வைக்க வேண்டும். மசாலா பொருட்களை வதக்கும்போதே காய் முக்கால் பாகம் வெந்து இருக்கும்.
மீதி காய் வெந்து குழம்பு நன்றாக கொதித்து மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது தேவைப்பட்டால் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சூப்பரான கமகம வாசத்தோடு ஒரு குழம்பை சுலபமாக தயார் செய்து விட்டோம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.
இதையும் படிக்கலாமே: 5 நிமிசத்துல ரோட்டு கடை அவிச்ச கார சட்னியை ரொம்ப சிம்பிளா வீட்ல இப்படி அரைச்சு பாருங்க. இட்லி கல் தோசை எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.
கத்திரிக்காய் முருங்கைக்காய் அளவோடு வெந்து சாப்பிட கொஞ்சம் வெடுக்கு வெடுக்கென இருந்தால் இந்த குழம்பு நல்ல ருசியாக இருக்கும். குழம்பு ரொம்பவும் தண்ணீராக போகக்கூடாது. கொஞ்சம் கிரேவி பதத்தில் இருக்கும் போதே அடுப்பை அணைத்து விடுங்கள்.