- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஉடல் சூட்டை குறைத்து முடி உதிர்வதை தடுக்க, இப்படி ஒரு பொருள் இருப்பதை இத்தனை நாட்களாக...

உடல் சூட்டை குறைத்து முடி உதிர்வதை தடுக்க, இப்படி ஒரு பொருள் இருப்பதை இத்தனை நாட்களாக மறந்து விட்டோமே. பாட்டி சொன்னதை இப்போதாவது ஞாபகப்படுத்தி பார்ப்போம்.

- Advertisement -

முடி உதிர்வுக்கு முதல் காரணமாக இருப்பது உடல் சூடு. இந்த உடல் சூட்டை குறைக்க இன்று தலைக்கு எத்தனையோ ஹேர் பேக்கை பயன்படுத்துகின்றோம். ஆனால், அந்த காலத்தில் இருந்தே நம்முடைய பாட்டி, நமக்கு சொல்லித் தந்த இந்த கை வைத்தியத்தை மறந்து விட்டோமே. அந்த காலத்தில் வாழ்ந்த ஆண்களும் பெண்களும் இந்த ஒரு பொருள் இல்லாமல் தலைக்கு குளிக்க மாட்டாங்க. உடல் சூட்டை குறைக்க, தலையில் இருக்கும் அரிப்பு நீங்க, தலை முடியில் இருக்கும் அழுக்கு சுத்தமாக, சுண்டு பொடுகு பிரச்சனை நீங்க, இந்த பொருள் அவ்வளவு உபயோகமாக இருக்கும். அந்த ஒரு பொருள் என்னவாக இருக்கும். உங்களால் கெஸ் பண்ண முடியுதா. வாங்க குறிப்பை படித்து அது என்ன பொருள் என்பதை தெரிந்து கொள்வோம். அதை எப்படி பயன்படுத்தினால் முடி உதிர்வை குறைக்கலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

உடல் சூட்டை குறைத்து, முடி உதிர்வை குறைக்கும் அரப்பு:
அந்த காலத்தில் சீயக்காயோடு சேர்த்து இந்த அரப்பையும் கலந்து தான் தலைக்கு குளிப்பார்கள். தலையில் இருக்கும் மொத்த அழுக்கையும் இந்த அரப்பு நீக்கிவிடும். அதோடு மட்டுமல்லாமல் உடல் சூட்டையும் இது குறைக்கும். அரப்புச்செடி கிராமப்புறங்களில் வளர்ந்து காணப்படும். உங்களுக்கு நேரடியாக அரப்புச்செடியிலிருந்து இலைகள் கிடைத்தால் அதை பறித்து குறிப்புக்கு பயன்படுத்தலாம். இல்லை உங்களுக்கு இந்த அரப்பு இலை கிடைக்காது என்றால் நாட்டு மருந்து கடைகளில் அரப்பு பொடி கிடைக்கும். அதை வாங்கி குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அரப்பு இலையாக கிடைத்தால் ஹேர் பேக் எப்படி தயார் செய்வது. முதலில் அரப்பு இலைகளை எடுத்து காம்புகளில் இருந்து கொஞ்சமாக கிள்ளி தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 1கைபிடி அரப்பு. அதே அளவு கருவேப்பிலை நமக்கு தேவை. அதையும் நல்ல தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்திருக்கும் அரப்பு, கருவேப்பிலை இரண்டையும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை எழுது போல அரைத்து ஒரு வெள்ளை காட்டன் துணியில் வடிகட்டி பயன்படுத்த வேண்டும். அவ்வளவுதான் சூப்பரான ஹேர் பேக் உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா. அதை தலையில் அப்ளை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஹேர் பேக் போடுவதற்கு முன்பாக தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் வைத்து விடுங்கள். சிக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த பேக்கை வேர்க்கால்களில் படும்படி போடுங்கள். பிறகு நுனி முடி வரை போட்டு கொண்டை கட்டிக்கொண்டு, 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பூ போட்டு, அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.

வாரத்தில் ஒரு நாள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலே முடி உதிர்வு படிப்படியாக குறைய தொடங்கும். சரி, அரப்பு பொடி வைத்திருப்பவர்கள் என்ன செய்வது. வெறும் கருவேப்பிலையை மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி கருவாப்பிலை சாறை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அரப்பு பொடியில் இந்த கருவேப்பிலை சாறை ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பழைய சாதத்தோடு இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து அரைத்து தலைக்கு போட்டால், உங்கள் முடி புதுப்பொலிவோடு வளர தொடங்கிவிடும். புதிய முடி வளர்ச்சியை பார்த்து நீங்களே அசந்து போவீங்க.

எப்போதுமே பொடியை பயன்படுத்தி ஹேர் பேக் தயார் செய்யும் போது தலை முடி கொஞ்சம் டிரை ஆகும். அதனால் இந்த ஹேர் பேக்கில் கொஞ்சமாக, அதாவது 1 ஸ்பூன் அளவு விளக்கெண்ணெய் ஊற்றி கலந்து அதன் பின்பு அந்த பேக்கை தலையில் போடவும். (விளக்கெண்ணெய் இல்லை என்றால் தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றிக் கொள்ளலாம்.) அந்த காலத்தில் பயன்படுத்தி வந்த இந்த அரப்பு தலை முடிக்கு ரொம்ப ரொம்ப நல்லதுங்க. நீங்களும் மிஸ் பண்ணாம அழகு குறிப்பு ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்