- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வீட்ல தக்காளி இருந்தா கறி குழம்பை மிஞ்சின டேஸ்ட்ல இந்த தக்காளி கறியை செஞ்சு கொடுங்க....

வீட்ல தக்காளி இருந்தா கறி குழம்பை மிஞ்சின டேஸ்ட்ல இந்த தக்காளி கறியை செஞ்சு கொடுங்க. இட்லி, தோசை பூரி சப்பாத்தி என எல்லாத்துக்கும் அட்டகாசமான இந்த சைடு டிஷ்சை எல்லாம் விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு நாம் என்ன தான் சட்னி சாம்பார் போன்றவைகள் செய்தாலும் கூட அசைவத்தில் செய்யப்படும் இந்த சிக்கன் குருமா ஒரு நல்ல சுவை மிகுந்த சைடிஷ் தான். அசைவம் சாப்பிட முடியாத நேரத்திலும் கூட அதே சுவையில் ஒரு அட்டகாசமான தக்காளி கறி குருமாவை இப்படி செஞ்சி கொடுத்தீங்கன்னா வீட்ல எல்லாரும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க அந்த தக்காளி கறியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த குருமா செய்வதற்கு முதலில் நான்கு பெரிய பழுத்த தக்காளியை குக்கரில் சேர்த்த பிறகு தக்காளி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் மட்டும் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இது விசில் முழுவதுமாக இறங்கி வரும் வரை அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து இந்த தக்காளி கறிக்கு ஒரு மசாலா அரைத்து விடுவோம். அதற்கு 1/4 தேங்காய், சின்ன துண்டு இஞ்சி, 5 பல் பூண்டு தோல் உரித்தது, 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 1டீஸ்பூன் மிளகாய்த் தூள், 1 டீஸ்பூன் தனியாத் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் சிக்கன் மசாலா இவை அனைத்தையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது தக்காளி நன்றாக ஆறி இருக்கும். அதை எடுத்து தக்காளியின் மேல் இருக்கும் தோலை மட்டும் நீக்கி விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதையும் பைன் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது குழம்பை தாளித்து விடலாம்.

- Advertisement -

அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், 1 பட்டை, 2 லவங்கம் சேர்த்து பொரிந்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை அறிந்து வைத்த வெங்காயம் எல்லாம் சேர்த்து ஒரு முறை வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கினால் போதும். பொன்னிறமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை அதன் பிறகு அரைத்து வைத்த இந்த மசாலாவை இதில் சேர்த்து அடுப்பை லோ ஃப்லேமில் வைத்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

இந்த மசாலாவின் பச்சை வாடை போய் எண்ணெய் திரண்டு வரும் போது நாம் ஏற்கனவே அரைத்து வைத்த தக்காளி விழுதையும் இதில் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள். இந்த தக்காளி கறி நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து திரண்டு வரும் போது மேலே கொத்தமல்லி தழைகளை போட்டு இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இப்படி செய்தீங்கன்னா வெறும் அஞ்சு நிமிஷம் போதும் நல்ல மொறு மொறுன்னு சூப்பரா டீக்கடை வெங்காய வடைய செஞ்சிடலாம். ஒரு முறை இதை ட்ரை பண்ணிட்டீங்கனா இனி எப்ப ஸ்நாக்ஸ் செய்தாலும் இந்த வடையை தான் செய்வீங்க.

அருமையான இந்த தக்காளி கறி ரெடி. இது எல்லா வகையான டிபனுக்கும் வைத்து சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும். அது மட்டுமின்றி இது வெரைட்டி ரைஸ்களுக்கு கூட இன்னும் கொஞ்சம் கெட்டியாக செய்து வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்