- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இப்படி செய்தீங்கன்னா வெறும் அஞ்சு நிமிஷம் போதும் நல்ல மொறு மொறுன்னு சூப்பரா டீக்கடை வெங்காய...

இப்படி செய்தீங்கன்னா வெறும் அஞ்சு நிமிஷம் போதும் நல்ல மொறு மொறுன்னு சூப்பரா டீக்கடை வெங்காய வடைய செஞ்சிடலாம். ஒரு முறை இதை ட்ரை பண்ணிட்டீங்கனா இனி எப்ப ஸ்நாக்ஸ் செய்தாலும் இந்த வடையை தான் செய்வீங்க.

- Advertisement -

வீட்டில் என்ன தான் நாம் வகைவகையாக சமைத்தாலும் ஸ்னாக்ஸ் வகைகள் செய்தாலும் கூட இந்த கடைகளில் வாங்கி சாப்பிடும் ஸ்நாக்ஸ்களை சுவை அதிகமாக இருப்பது போல தான் உணர்வோம். அதிலும் இந்த டீக்கடைகளில் கிடைக்கும் வெங்காய வடை , பஜ்ஜி, போண்டா போன்றவைகளுக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கும். அந்த வகையில் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் ஒரு சூப்பரான டீக்கடை வெங்காய வடையை எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் -2, பச்சை மிளகாய் – 2, காஷ்மீரி சில்லி பவுடர் -1 டீஸ்பூன், அரிசி மாவு – 2 டீஸ்பூன் கோதுமை மாவு -1 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், கருவேப்பிலை -1 கொத்து எண்ணெய் பொரித்தெடுக்க தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

இந்த வடை செய்வதற்கு வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் அரிந்து கொள்ளுங்கள். அதே போல பச்சை மிளகாயும் சின்னதாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் மிகவும் சின்ன குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் பச்சை மிளகாய் பதிலாக கொஞ்சமாக தனி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பவுலில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தூள், உப்பு இதை மட்டும் சேர்த்த பின்பு தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இப்படி பிணையும் போது வெங்காயத்திலிருந்து நீர் விட்டு வெங்காயத்தின் அனைத்து பக்கத்திலும் உப்பு காரம் எல்லாம் சமமாக பரவி விடும்.

- Advertisement -

அதன் பிறகு இந்த வெங்காயத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு என இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். கடைகளில் கோதுமை மாவிற்கு பதிலாக மைதா மாவை சேர்ப்பார்கள். உங்களுக்கு விருப்பமில்லை மைதா மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு மாவையும் சேர்த்த பிறகு மீண்டும் ஒரு முறை பிசைந்து கொள்ளுங்கள். இப்போது இந்த மாவை எடுத்து கைகளில் வடை போல அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானவுடன் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றிய பிறகு தட்டில் தயார் செய்து வைத்திருக்கும் வடைகளை ஒவ்வொன்றாக எடுத்து போட்டு ஒரு புறம் சிவந்தவுடன் மறுப்புறம் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள். இந்த வடையை போட்டவுடன் கரண்டியால் கிண்டி விடக் கூடாது. இதை போட்டு ஒரு நிமிடம் கழித்த பிறகு திருப்பி போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கிராமத்தில் கத்திரிக்காய் மோர் குழம்பு இப்படிதான் வைப்பாங்க. ரொம்ப ரொம்ப ஈஸியா ஐந்தே நிமிடத்தில் இந்த மோர் குழம்பை ருசிக்க ருசிக்க, மணக்க மணக்க வைக்கலாம் வாங்க.

மிகவும் சுவையான சூப்பரான டீக்கடை வெங்காய வடை நிமிடத்தில் தயாராகி விட்டது. இனி எப்போது உங்கள் வீட்டில் குழந்தைகள் ஸ்னாக்ஸ் வேண்டும் என்று கேட்டாலும் இரண்டு வெங்காயம் இந்த பொருட்கள் இருந்தால் போதும் சட்டுனு என்று செய்து கொடுத்து விடலாம். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்