வேண்டுமென்றால் இந்தக் குறிப்பை தொடங்குவதற்கு முன்பு, இன்ச் டேப்பை வைத்து கூட உங்கள் முடியை அளந்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த பேக்கை போட தொடங்கி இரண்டு மாதம் கழித்து உங்கள் முடியை அளந்து பாருங்கள். எந்த அளவுக்கு முடி வளர்ச்சி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். முடியின் நீளம் மட்டும் அல்ல, அடர்த்தியும் கூட நன்றாக வளர்ந்திருக்கும். அதற்கான ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடிய சத்தும் இந்த ஹேர் பேக்கில் அடக்கியுள்ளது. வாங்க குறைந்த செலவில், இந்த ஹேர் பேக்கை நம் கையாலேயே நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம் என்று பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.
இரண்டு மடங்கு முடி வளர்ச்சியை தரும் ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு இயற்கையான கற்றாழை ஜெல் தேவை. அடுத்தபடியாக கிரீன் டீ தேவை. விட்டமின் இ கேப்ஸ்யூல் தேவை. கற்றாழையை எடுத்து அதன் மேலே மஞ்சள் நிறத்தில் வரக்கூடிய பாலை சுத்தம் செய்து விடுங்கள். பிறகு கற்றாழையை வெட்டி அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
1/4 கப் அளவு கற்றாழை ஜெல் தேவை. அடுத்து ஒரு பாக்கெட் கிரீன் டீயை 1 கப் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு விட்டமின் இ கேப்ஸ்யூல் உள்ளிருக்கும் ஜெல் நமக்கு தேவைப்படும்.
மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்திருக்கும் 1/4 கப் கற்றாழை ஜெல்லை போட்டு, 1/4 கப் அளவு கிரீன் டீ தண்ணீரை ஊற்றி, மிக்ஸியில் இரண்டு ஓட்டு ஓட்டுங்கள் சூப்பரான ஒரு ஜெல் கிடைக்கும். அதில் இந்த விட்டமின் இ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் சேர்த்து மீண்டும் ஒரு ஓட்டு ஓட்டினால் சூப்பரான ஹேர்பேக் தயார்.
இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டொர் செய்தால் ஐந்து நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த பேக்கை ஸ்கேல்பில் படும்படி நன்றாக அப்ளை செய்யவும். மீதம் இருக்கும் பேக்கை நுனி மூடி வரை போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் 20 ல் இருந்து 25 நிமிடங்கள் கழித்து உங்கள் தலையை நன்றாக, ஷாம்பு போட்டு அலசி கொள்ளுங்கள்.
மேலே சொன்ன விஷயங்களை சரியாக பின்பற்றி வர வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும். முடி வளர்ச்சியில் நிச்சயம் நல்ல வித்தியாசம் தெரியும். கற்றாழை குளிர்ச்சி தரக்கூடிய பொருள். உங்களுக்கு ரொம்பவும் சளி பிடிக்கும், சைனஸ் பிரச்சனை இருக்கிறது என்றால் இந்த ஹேர் பேக்கை நீங்கள் பயன்படுத்த வேண்டாம். அப்படி இல்லை, எனக்கு இந்த பேக் அவசியம் தேவை என்பவர்கள் குளிர்ச்சியான உடம்பைக் கொண்டவர்கள், வெறும் 10 நிமிடம் மட்டும் கூட இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டு பிறகு தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: கையோடு உதிர்ந்து விழும் உங்க முடியை இனி நீங்களே இழுத்தா கூட உதிராத அளவுக்கு ஸ்ட்ராங்கா மாற்ற இது தாங்க பெஸ்ட். நல்லா கருகருன்னு வளரவதோடு ஒரு முடி கூட உதிராது.
நல்ல வெயில் அடிக்கும் சமயத்தில் ஹேர் பேக்கை தலையில் போடுங்க. பொழுது சாய்ந்த நேரத்திலோ அல்லது அதிகாலை வேளையிலும் இந்த பேக்கை பயன்படுத்தாதீர்கள். ஆனால் இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வந்தால் உங்கள் தலைமுடி வளர்ச்சியில் நீங்கள் நம்ப முடியாத ஆச்சரியப்படும் அளவுக்கு நல்ல வித்தியாசத்தை பார்க்க முடியும். அழகு குறிப்பு தேவை என்பவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.