வீட்டில் தன வரவு அதிகரிக்க வேண்டும் என்றால் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும். லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க நாம் வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்து நல்ல நேர்மறை சிந்தனையுடன் இருக்க வேண்டும். இவையெல்லாம் நாம் தொடர்ச்சியாக செய்ய நம்முடைய மனநிலை எப்போதும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் தன வரவை அதிகரிக்க வேண்டுமெனில் முதலில் நம்முடைய மனம் அதற்கான நிலையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
இன்றளவும் பல குடும்பங்களில் நிம்மதி இல்லாமல் வீட்டில் இருக்கும் நபர்களை ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி பார்த்துக் கொண்டாலும் மனம் விட்டு சிரித்து பேசி மகிழ மாட்டார்கள். இப்படி இல்லாதவர்கள் மனம் எப்போதும் சோர்வுற்றே இருக்கும். அப்படியானவர்களால் எந்த ஒரு பூஜையும் வழிப்பாடு செய்ய முடியாது. ஏன் அவர்களின் சிந்தனைகள் கூட தெளிவுடன் இருக்காது.
இப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி முன்னேற்றத்தை பற்றி யோசிப்பார்கள். அதன் மூலம் எப்படி வருமானத்தை பெருக்க முடியும். எனவே ஒரு குடும்பம் தழைக்க முதலில் அவர்களுடைய மனமானது மகிழ்ச்சியான நிலையில் இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கவும் ஒரு எளிய பரிகார முறை உள்ளது. அதைப் பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் மகிழ்ச்சி நிலைக்க
இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும். அதுவும் காலை எழுந்து குளித்து முடித்த பிறகு நாம் உணவு உண்பதற்கு முன்பாக செய்வது சிறந்தது. இப்படி வியாழக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் வீட்டின் ஈசானிய மூலை அதாவது வடகிழக்கு மூலையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டில் ஈசானி மூலையில் கொஞ்சம் கங்கா ஜலம் இருந்தால் அதை விட்டு சுத்தப்படுத்துங்கள். இல்லை என்றால் சுத்தமான நீரில் கொஞ்சம் மஞ்சள் கலந்து அதை வைத்து தரையை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்தத் தரையில் மஞ்சளை தடவி அதற்கு மேலும் மஞ்சளால் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ளுங்கள். அந்த ஸ்வஸ்திக் சின்னத்தின் மேல் ஒரு கைப்பிடி அளவு கடலைப்பருப்பும் அதற்கு மேல் ஒரு கட்டி வெல்லமும் வைக்க வேண்டும்.
இப்படி வைத்த பிறகு அதன் முன் அமர்ந்து உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும் குடும்பத்தில் தன வரவு அதிகரிக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இது அன்றும் முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் இந்த கடலைப்பருப்பையும் வெல்லத்தையும் எடுத்துச் சென்று பசுவிற்கு தானமாக கொடுக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கேட்ட வரம் உடனே கிடைக்க வன்னி இலை அபிஷேகம்
இவ்வளவு தான் பரிகாரம். இந்த பரிகாரத்தை குறைந்தது மூன்று வாரங்கள் அதிகபட்சம் ஒன்பது வாரங்கள் வரை செய்ய வேண்டும். இதை செய்ய செய்ய உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் மனநிலையும் மாறி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு சிரித்து பேசி மகிழும் காலமும் வரும். இதனால் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்து தன வரவும் அதிகரிக்கும். இந்த பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடையுங்கள்.