- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமிருதுவான சருமத்தை பெற ஓட்ஸ் ஃபேஸ் பேக்.

மிருதுவான சருமத்தை பெற ஓட்ஸ் ஃபேஸ் பேக்.

- Advertisement -

குழந்தைகளை பார்க்கும் பொழுது நம்மையும் அறியாமல் அவர்களை கொஞ்ச வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதற்கு குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற மனம் ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களின் சருமம் மிகவும் மிருதுவாக இருப்பதும் ஒரு காரணமே. அப்படிப்பட்ட மிருதுவான சருமத்தை வயதான பிறகும் பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

வயது ஆக ஆக நம்முடைய முகத்தில் ஒருவித முதிர்ச்சி தோன்றும். அந்த முதிர்ச்சியை நீக்கி என்றும் குழந்தை போல் மிருதுவான சருமத்தை பெறவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ அந்த குழந்தை சருமத்தை வயதான பிறகும் பேணி காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலேயே ஒருவித பொறாமை மனதிற்குள் தோன்றுவிடும். வீட்டில் இருக்கக்கூடிய ஓட்ஸை பயன்படுத்தி நாமும் எப்பேர்பட்ட முதிர்ந்த சருமமாக இருந்தாலும் அதை குழந்தை சருமமாக மாற்ற முடியும்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள்தான் தேவைப்படும். அவை ஓட்ஸ், தயிர், தேன். சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெள்ளை ஓட்ஸை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த ஓட்ஸ் பவுடரை காற்று புகாத ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பவுலை எடுத்துக் கொள்வோம். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு ஓட்ஸ் பவுடரை போட வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிர், ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் இவற்றை ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் அப்படியே உலர விட்டு பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் மூன்று நாட்கள் செய்ய வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய முதிர்ச்சித் தன்மை நீங்கி முகத்தோல் மிகவும் மிருதுவாக தோற்றமளிக்கும். அது மட்டுமல்லாமல் சருமத்துளைகளில் இருக்கக்கூடிய அழுக்குகளை முற்றிலுமாக நீக்கி முகத்திற்கு ஒருவித புத்துணர்ச்சியை தரும்.

- Advertisement -

மேலும் கரும்புள்ளிகள், முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை முழுவதுமாக நீக்கிவிடும். இயற்கையிலேயே சுரக்கக்கூடிய எண்ணெய் பசையை தேவையான அளவு மட்டும் தக்க வைத்துக்கொண்டு அதிகப்படியாக சுரப்பதை நீக்கும் வல்லமை இந்த ஃபேஸ் போக்கிற்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஓட்ஸில் இயற்கையிலேயே விட்டமின் ஈ இருப்பதால் சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: கோதுமை மாவு அழகு குறிப்பு

இந்த எளிமையான ஃபேஸ் பேக்கை நாம் நம்முடைய முகத்தில் தடவி என்றும் குழந்தை போன்ற மிருதுவான சருமத்தை பெற்று வாழ்வோம்.

சற்று முன்