- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகத்தில் இருக்கும் மங்கு மறைய

முகத்தில் இருக்கும் மங்கு மறைய

- Advertisement -

பெண்களை அதிகமாக தாக்கக்கூடியது தான் இந்த மங்கு. முகத்திலோ கழுத்திலோ அல்லது தோள்பட்டையிலோ திடீரென்று கருமை நிறம் ஏற்பட்டு திட்டு திட்டாக இருக்கும். இதைத்தான் மங்கு என்கிறோம். இந்த மங்கை நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய ஃபேஸ் பேக் மற்றும் ஹெல்ப் ட்ரிங்க் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

சமசீர் அற்ற ஹார்மோன்களால் மங்கு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில பெண்கள் கர்ப்பம் தரிக்கும் பொழுதும் மங்கு ஏற்படும். அதிகமாக வெயிலில் இருப்பவர்களுக்கு சூரிய ஒளியில் இருக்கக்கூடிய புற ஊதா கதிர்களால் மங்கு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த மங்கை நீக்குவதற்கு பலரும் ரேசர் ட்ரீட்மெண்ட் செய்வார்கள். அதை செய்யும் பொழுது அந்த சமயம் வேண்டுமானாலும் அது நீங்கலாம். நிரந்தரமாக நீங்க வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

- Advertisement -

இந்த மங்கை நீக்குவதற்கு செய்யக்கூடிய ஃபேஸ் பேக்கை பார்ப்போம். ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்து நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த வெந்தயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்க்க வேண்டும். பிறகு அதிமதுர பொடி ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து இதை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 4 நாட்கள் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய மங்கு குறையும்.

முகத்திற்கு வெளி பூச்சு பூசுவதன் மூலம் மட்டுமே மங்கை சரி செய்ய முடியாது. உள்ளுக்குள்ளும் நாம் ஆரோக்கியமான ஒரு ஹெல்த் ட்ரிங்க்கை எடுத்துக் கொள்வதன் மூலம் முற்றிலுமாக இந்த மங்கை நீக்க முடியும். இதற்கு ஒரு கிளாஸ் அளவிற்கு தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் ஊற்றிக்கொண்டு அதில் ஒரு நெல்லிக்காயை பொடியாக நறுக்கி போட்டு அதனுடன் ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை சேர்த்து தேவைப்பட்டால் இந்துப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்து குடிக்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு இரண்டு வாரங்கள் தினமும் குடிப்பதன் மூலம் உள்ளுக்குள் இருக்கக்கூடிய ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளில் சமநிலை ஏற்படும். இந்த ட்ரிங்கை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் தலைமுடியும் ஆரோக்கியமாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: மாதுளை தோல் அழகு குறிப்பு

மங்கை சரி செய்வதற்கு அதிக செலவு செய்து தேவையில்லாத பொருட்களை உபயோகப்படுத்தி அதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிப்பிற்கு உள்ளாவதை விட இயற்கையான இந்த பொருட்களை நம் வீட்டிலேயே தயார் செய்து முறையாக பயன்படுத்துவதன் மூலம் மங்கை முற்றிலும் நீக்குவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமும் மேம்படுத்த முடியும்.

சற்று முன்