- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உடுப்பி ஹோட்டல் ஸ்டைலில் பீன்ஸ் பொரியல் ரெசிபி

உடுப்பி ஹோட்டல் ஸ்டைலில் பீன்ஸ் பொரியல் ரெசிபி

- Advertisement -

நம் உண்ணும் உணவு வகைகள் எப்பொழுதுமே ஒவ்வொருவர் செய்யும் போது ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். அதுவும் ஒரே சமையல் வீட்டில் சமைப்பது ஒரு வித சுவையாகவும் ஹோட்டலில் சமைப்பது ஒரு வித சுவையாகவும் இருக்கும். ஆகையால் தான் வீட்டில் என்ன தான் நாம் பார்த்து பார்த்து செய்தாலும் ஹோட்டலில் சாப்பிடும் போது அதன் சுவை தனியாக தெரிகிறது.

இதே சுவை நாம் வீட்டில் செய்யும் போது நிச்சயமாக அதில் வருவதில்லை. இதற்கு காரணம் அவர்கள் அதில் சேர்க்கும் சில பொருட்கள் தான். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் எல்லோரும் சாதாரணமாக வீட்டில் செய்யக் கூடிய ஒரு பீன்ஸ் பொரியலை நல்ல உடுப்பி ஹோட்டல் ஸ்டைலில் நாமும் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதற்கு என்ன ஸ்பெஷல் மசாலா சேர்க்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பீன்ஸ் – 300 கிராம்,
கடுகு – 1 டீஸ்பூன்,
சீரகம் -1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்,
உப்பு -1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை -1 கொத்து,
கடலை எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்,
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு,
வெல்லம் -1/4 டீஸ்பூன்.

செய்முறை

முதலில் பீன்ஸை சுத்தம் செய்து பொரியலுக்கு நறுக்குவது போல பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மிக்ஸி ஜாரில் தேங்காய், அரை டீஸ்பூன் கடுகு ,அரை டீஸ்பூன் சீரகம் காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரை ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் சீரகம் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிந்த பிறகு நறுக்கி வைத்த பீன்சை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்து மூடி போட்டு ஆறு நிமிடம் வரை வேக விடுங்கள். இடையிடையே கலந்து விட மறக்காதீர்கள்.

ஆறு நிமிடம் கழித்து எடுத்து வைத்திருக்கும் புளியை கரைத்து அந்த தண்ணீரை மட்டும் பொரியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் வெல்லம் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து நன்றாக கலந்து மூன்று நிமிடம் வேக விடுங்கள்.

- Advertisement -

இந்த பொரியலுக்கு நாம் சேர்த்திருக்கும் மசாலா தான் அதன் சுவையை கூட்டி கொடுக்கக் கூடியது. ஆகையால் இந்த மசாலாவை மறக்காமல் சேர்த்து விடுங்கள். இப்போது மூன்று நிமிடம் கழித்து மூடியை திறந்து பாருங்கள் நல்ல கமகமவென்று வாசனையுடன் ஹோட்டல் ஸ்டைலில் பீன்ஸ் பொரியல் அட்டகாசமாக தயாராகி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பலாக்கொட்டை மசால் வடை செய்முறை

ஒரு முறை இப்படி பொரியல் செய்து சாப்பிட கொடுத்து பாருங்க, இனி எப்பொழுதும் உங்கள் வீட்டில் பீன்ஸ் பொரியல் தான் செய்ய சொல்லி கேட்பார்கள். நீங்களும் ஒரு முறை செஞ்சு பாருங்க.

சற்று முன்