- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கம்பு வெஜிடபிள் கஞ்சி செய்முறை

கம்பு வெஜிடபிள் கஞ்சி செய்முறை

- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு அவர்களின் உணவு பழக்க வழக்கமே மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்ந்தது. அவர்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களை தான் அதிக அளவில் சேர்த்து வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் சிறு தானிய உணவுகளை மறந்து துரித உணவுகளை அதிகமான அளவில் எடுத்துக் கொள்வதால் அதிகமாக நோய் வாய் பட்டு கஷ்டப்பட்டு வருகிறோம். இந்த நிலையை மாற்றுவதற்கு நம் முன்னோர்களைப் போலவே நாமும் எந்தெந்த வகைகளில் எல்லாம் சிறுதானியங்களை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள முடியுமோ அந்த வகைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட உணவுப் பொருட்களுள் ஒன்றான கம்பு வெஜிடபிள் கஞ்சி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கம்பில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. கம்பை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் குறையும். உடல் வலிமை பெறும். கம்பில் அதிகளவு வைட்டமின் ஏ இருப்பதால் தோல் ஆரோக்கியம், கண்பார்வை போன்றவற்றிற்கு மிகவும் சிறப்பாக விளங்குகிறது. மேலும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் கம்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும், உடல் சூட்டால் கஷ்டப்படுபவர்களும் இந்த கம்பை தங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கம்பு – ஒரு கப்
  • எண்ணெய் – 3 ஸ்பூன்
  • கடுகு – 1/2 ஸ்பூன்,
  • உளுந்து – 1/2 ஸ்பூன்
  • சீரகம் – 1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிது
  • பச்சை மிளகாய் – 2
  • வெங்காயம் – 1
  • கேரட் – 1 கப்,
  • பீன்ஸ் – 1 கப்
  • இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
  • தேங்காய் – 1/2 கப்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் கம்பை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி மூன்று முறை கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக உடைத்து குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் மூன்று கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பும் சேர்த்து மூடி போட்டு நான்கு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து பிறகு அணைத்து விட வேண்டும்.

இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, 1/4 ஸ்பூன் சீரகம் இவற்றை போட வேண்டும். கடுகு வெடித்ததும் கருவேப்பிலை, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் இவற்றை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய பீன்ஸை அதில் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

கேரட் பீன்ஸ்க்கு பதிலாக நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் வேறு எந்த காய்கறிகளை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு இதில் அரை லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பை சேர்த்து மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதித்து காய்கறிகள் அனைத்தும் வெந்த பிறகு நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் கம்பிலிருந்து ஒரு கப் அளவிற்கு எடுத்து கொதிக்கின்ற தண்ணீரில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தேங்காய், 1/4 ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். கம்பு கஞ்சி இரண்டு நிமிடம் குறைந்த தீயில் நன்றாக கொதிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். கடைசியாக அடுப்பில் இருந்து இறக்கும்பொழுது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை அதில் சேர்த்து இறக்க வேண்டும். மிகவும் ஆரோக்கியமான சுவையான கம்பு வெஜிடபிள் கஞ்சி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான வாழைப்பூ மசால் தோசை

வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையில் கம்பு கஞ்சி செய்து கொடுப்பதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் செயல்படுவார்கள்.

சற்று முன்