- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெண்டைக்காய் சாதம் செய்முறை

வெண்டைக்காய் சாதம் செய்முறை

- Advertisement -

இன்றைய காலத்தில் இருக்கும் குழந்தைகள் சாதம் குழம்பு காய்கறி என்று தனித்தனியாக சாப்பிடுவதை விட வெரைட்டி ரைஸ் என்று சொல்லக்கூடிய கலவை சாதத்தை சாப்பிட தான் அதிகமாக விரும்புவார்கள். இதனாலேயே பல காய்கறிகளை அவர்கள் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களுக்காக வெண்டைக்காயை வைத்து வெண்டைக்காய் சாதம் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்க போகிறோம்.

வெண்டக்காயை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு நோய், வயிற்றுப்புண், பார்வை குறைபாடு போன்ற நோய்கள் சரியாகும். வெண்டைக்காயில் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், விட்டமின் சி, பி1, பி2, பி6, பி9 போன்ற சத்துக்கள் உள்ளது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
  • வெண்டைக்காய் – 1/2 கிலோ
  • கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
  • பூண்டு – 20 பல்
  • சீரகம் – 1/2 டேபிள்ஸ்பூன்
  • மிளகு – 1/2 டேபிள்ஸ்பூன்
  • கருவேப்பிலை – 2 கொத்து
  • காய்ந்த மிளகாய் – 10
  • தேங்காய் – 1/2 மூடி
  • கடுகு – 1/2 ஸ்பூன்
  • வேர்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • இஞ்சி பூண்டு பேஸ்ட், – 1/2 ஸ்பூன்
  • வேகவைத்த சாதம் – ஒரு கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து குறைந்தது ஐந்து நிமிடம் ஆவது அந்த எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். வெண்டைக்காய் நன்றாக வற்றல் ஆக மாறிய பிறகு அதை அப்படியே எண்ணெயில் இருந்து தனியாக எடுத்து வைத்து ஒரு சிட்டிகை அளவு உப்பை மட்டும் தூவி கிளறி வைத்து விட வேண்டும்.

மீதம் இருக்கும் எண்ணையில் கடலைப்பருப்பை சேர்த்து கடலைப்பருப்பு லேசாக சிவந்ததும் உளுந்தை சேர்த்து இவை இரண்டும் நன்றாக சிவந்த பிறகு பூண்டு, சீரகம், மிளகு, ஒரு கொத்து கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பூண்டு நன்றாக சிவந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு துருவிய தேங்காயை அதில் சேர்த்து அந்த சூட்டிலேயே நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இதை ஆற வைத்து மிக்ஸி சாருக்கு மாற்றி பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் காய்ந்ததும் அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வேர்கடலை, முந்திரி பருப்பு, கீறிய பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு இரண்டு நிமிடம் நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியில் இருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து வடித்து வைத்திருக்கும் சாதத்தையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக கிளறி விட வேண்டும். சாதத்தில் உப்பு போடவில்லை என்றால் உப்பை சேர்த்து கிளற வேண்டும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி விடலாம். சுவையான வெண்டைக்காய் சாதம் தயார் ஆகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கம்பு உப்புமா செய்முறை

பல அற்புதமான சத்துக்கள் கொண்ட வெண்டைக்காயை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்கள் வராமல் காப்பாற்ற முடியும் என்பதால் வெண்டைக்காய் சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இந்த முறையில் வெண்டைக்காய் சாதம் செய்து கொடுங்கள்.

சற்று முன்