- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval30-05-2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு

30-05-2024 தேய்பிறை அஷ்டமி வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வரும் தேய்பிறை அஷ்டமி திதி. இந்த நாளில் பைரவரை வழிபாடு செய்வது, குரு அருளையும் பெற்று தரும். பொதுவாகவே கடன் பிரச்சனை தீருவதற்கு இந்த நாளில் பைரவரை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். அந்த வகையில் நாளைய தினம் வரவிருக்கும் அஷ்டமி திதியில் கடன் பிரச்சினை தீர, செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே அஷ்டமி திதியில் ராகுகால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்வது சிறப்பு. நாளைய தினம் 30.5.2024 வியாழக்கிழமை மதியம் 1:30 மணியிலிருந்து 3:00 மணி வரை ராகு கால நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் உங்கள் வீட்டின் அருகில் எந்த கோவில் சிவன் கோவில் திறந்திருக்கிறதோ, அந்த கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். முடியாது என்பவர்கள் உங்கள் வீட்டிலேயே பைரவரை நினைத்து இந்த வழிபாட்டை செய்தாலும் சிறப்பான பலனை தரும்.

- Advertisement -

நாளைய தினம் பரிகாரத்திற்கு ஒரு பிரியாணி இலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பிரியாணி இலையில் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனையை எழுதுங்கள். உதாரணத்திற்கு ‘சுரேஷிடம் வாங்கிய 5,00,000 ரூபாய் கடன் அடைய வேண்டும் என்று அந்த பிரியாணி இலையில் எழுதி விட வேண்டும்.

இந்த பிரியாணி இலையை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, கால பைரவரை வேண்டி இந்த கடன் சுமை சீக்கிரம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள். பைரவர் சன்னிதானத்தில் ஒரு மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி அந்த நெருப்பில் இந்த பிரியாணி இலையை பொசுக்க முடியும் என்றால் நெருப்போடு நெருப்பாக எரித்து பொசுக்கி விடுங்கள்.

- Advertisement -

இல்லை என்றால் வீட்டிலேயே வரவேற்புறையிலோ அல்லது பூஜை அறையிலோ ஒரு மண் விளக்கை ஏற்றி, அந்த தீபச்சுடரை கால பைரவராக நினைத்து கையில் இருக்கும் பிரியாணி இலையை அந்த தீபச்சுடரில் பொசுக்கினாலும் உங்கள் கடன் அடையும் என்பது நம்பிக்கை.

நாளைய தினம் குறிப்பாக ராகு கால நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முடியாதவர்கள் அந்த நேரத்தில் வெளியில் இருப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், எல்லாம் நாளைய தினம் மாலை 6:00 மணிக்கு மேலாக இரவு 9:00 மணிக்குள்ளாக இந்த பரிகாரத்தை வீட்டில் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: தங்க வசியம் ஏற்பட பரிகாரம்

மாலை நேரத்தில் பைரவர் சன்னிதானத்தில் விசேஷ பூஜைகள் நடக்கும் அந்த பூஜையின் போதும் இந்த பரிகாரத்தை கோயிலில் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிலிருந்தும் பிரியாணி இலையில் உங்கள் கடன் பிரச்சனையை எழுதி கோவிலுக்கு எடுத்து செல்லலாம், அல்லது கோவிலிலேயே அமர்ந்தும் பிரியாணி இலையில் உங்கள் கடன் பிரச்சனையை எழுதி வேண்டுதல் வைக்கலாம். அதில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

சற்று முன்