- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்க தேங்காய் பரிகாரம்

குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்க தேங்காய் பரிகாரம்

- Advertisement -

ஒரு சில பேர் வீட்டில் மன நிம்மதி என்பது சுத்தமாக இருக்காது. காரணம் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவு. அம்மா அப்பாவுக்கு சண்டை, அம்மா மகளுக்கு சண்டை, அப்பா மகனுக்குள் சண்டை, மாமியார் மருமகள் நாத்தனார், இப்படி சொந்த பந்தங்களோடு சண்டை போட்டு குடும்பத்தில் இருக்கும் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போகும்.

சில வீடுகளில் அப்பாவுக்கு பிள்ளையை பார்த்தால் பிடிக்காது, கணவனுக்கு மனைவியை பார்த்தாலே பிடிக்காது, இப்படி ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை காட்டிக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அது ஒரு சிலருக்கு மன கஷ்டத்தை கொடுத்து விடும். இல்லற வாழ்க்கையில் விரிசலை கொடுத்து விடும்.

- Advertisement -

இதற்கெல்லாம் கண் திருஷ்டி தான் காரணம். உங்களுடைய வீட்டில் சதாகாலமும் சண்டை சச்சரவால் நிம்மதி இழக்கப்பட்டால், உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களை வெறுத்துக் கொண்டே இருந்தால், இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்காக.

குடும்ப சண்டை சச்சரவு நீங்க

வெள்ளிக்கிழமை அதிகாலை வேலையிலேயே எழுந்து குளித்து விடுங்கள். ஒரு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தேங்காயை ஒரு முறை சுத்தமாக கழுவி விடுங்கள். தேங்காய்க்கு மேலே முழுவதும் மஞ்சளை தடவி 5 குங்குமப்பொட்டுக்கள் வைத்துக் கொள்ளவும். பூஜை அறையில் இந்த தேங்காயை வைத்து விட்டு உங்கள் வீட்டில் இனிமேல் சண்டை சச்சரவுகள் வரக்கூடாது என்று மனதார பிரார்த்தனை செய்து, குலதெய்வத்தை வேண்டி அந்த தேங்காயை இரண்டாக உடைத்து விடுங்கள்.

- Advertisement -

தேங்காய்க்கு மேல் பக்கம் இருக்கும் அந்த நாரை பிரித்து விட்டு, நிலை வாசல் படியில் இரண்டு பக்கமும் உடைத்த தேங்காயை வைத்து விடுங்கள். வெளியில் எல்லோரும் தெரியும்படி ரோட்டு பக்கத்தில் இருக்கும் கேட்டில் வைக்க வேண்டாம். ஹாலுக்கு பக்கத்தில் ஒரு பெரிய வாசல் படி இருக்கும் அல்லவா அந்த இடத்தில் வையுங்கள்.

வெள்ளிக்கிழமை காலை இதை வைத்து விட வேண்டும். வெள்ளிக்கிழமை மாலை 5 மணி போல இந்த தேங்காயை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி தூரமாக போட்டு விட வேண்டும். இரண்டு தேங்காய் மூடிகளையும் ஒன்றாக வலது கையில் வைத்து தலையை சுற்றவும்.

- Advertisement -

குடும்ப ஒற்றுமைக்கு, குடும்ப தலைவியின் கையால் இந்த பரிகாரத்தை செய்தால் போதும். குடும்ப சண்டைகள் தீரும் என்பது நம்பிக்கை. குறிப்பாக நிறைய பேர் வீடுகளில் கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருக்கிறது. அவர்களுக்குள் புரிதல் இல்லாத தன்மை இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் குடும்பம் இருந்தால் இந்த பரிகாரத்தை செய்யும் போது உடனடியாக பலன் கிடைக்கும்.

வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இதை செய்து வாருங்கள். மூன்று வெள்ளிக்கிழமை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில் குடும்பத்தில் நிம்மதி வருவதை உணர முடியும். அதன் பிறகு நீங்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. திரும்பவும் மூன்று மாதம் கழித்து கண் திருஷ்டி அதிகமாக இருக்கிறது மீண்டும் சண்டை வரத் தொடங்கி விட்டது என்றால் இதேபோல பரிகாரத்தை மீண்டும் செய்யலாம் தவறு கிடையாது.

அதேபோல வெள்ளி, செவ்வாய் கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் நிலை வாசலில் எலுமிச்சம் பழத்தை அறுத்து மஞ்சள் குங்குமம் தடவி வைக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி, கண் திருஷ்டி நீக்கும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய தானம்

என்னதான் நவநாகரீகத்தில் உலகம் வளர்ந்து கொண்டு வந்தாலும் நம்முடைய கஷ்டங்களை தீர்க்கக் கூடிய சின்ன சின்ன பரிகாரங்களை பின்பற்றுவதே புத்திசாலித்தனம். குடும்ப நலனுக்கு வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் இந்த குறிப்புகளை எல்லாம் பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்