உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய முடி உதிர்வை தடுப்பதற்கு அனைவரும் வெந்தயத்தை பயன்படுத்துவார்கள். வெந்தயத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒரு சிலருக்கு சளி பிடிக்கும் தன்மை கூட ஏற்படும். ஆனால் அதே உடல் குளிர்ச்சியை தரக்கூடிய பாதாம் பிசினை நாம் நம்முடைய தலைக்கு தடவுவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும். ஆனால் எந்தவித சளியும் பிடிக்காது. அப்படிப்பட்ட பாதாம் பிசின் ஹேர் மாஸ்கை எப்படி பயன்படுத்துவது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
பலருக்கும் தங்களுடைய உடல் சூட்டினால் அதிக அளவு முடி உதிர்தல் பிரச்சினை என்பது ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் சூரிய வெப்பத்தாலும் உடல் உஷ்ணம் அதிகரித்து அதன் மூலமாகவும் முடி உதிர்தல் பிரச்சனை என்பது ஏற்படும். இந்த பிரச்சினையை நீக்குவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் அந்த வழிமுறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் சளி பிடிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதை தவிர்ப்பதற்கு பாதாம் பிசினை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான ஹேர் மாஸ்க்கை பற்றி தெரிந்து கொள்வோம்.
பாதாமில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பாதாமை நாம் நம்முடைய தலைக்கு பாதாம் எண்ணையாக தடவுவதன் மூலமும் அதேசமயம் உணவாக உட்கொள்வதன் மூலமும் நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை நம்மால் அதிகரித்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட பாதாம் மரத்தில் இருந்து வருவது தான் பாதாம் பிசின்.
பொதுவாக இந்த பாதாம் பிசினை உடல் உஷ்ணம் அதிகம் இருப்பவர்கள் உட்கொள்வார்கள். வெயில் காலத்தில் அதிக அளவில் எடுத்துக் கொள்வார்கள். இந்த பாதாம் பிசினை நம்முடைய தலைக்கு நாம் தழுவுவதன் மூலம் பாதாமில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு கிடைக்கும். இதனால் முடி உதிர்தல் பிரச்சினை என்பது நின்றுவிடும். முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். அதோடு முடி பட்டு போல மிளிரவும் தொடங்கும்.
இப்பொழுது இந்த பாதாம் பிசின் ஹேர் மாஸ்க் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். இதற்கு முதல் நாள் இரவே இரண்டு ஸ்பூன் அளவிற்கு பாதாம் பிசினை எடுத்து சுத்தம் செய்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் இந்த பாதாம் பிசின் நன்றாக ஊறி அந்த கிண்ணம் முழுவதும் நிறைந்திருக்கும். இப்பொழுது இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் உங்கள் வீட்டில் எந்த வாழைப்பழம் இருந்தாலும் ஒரு வாழைப்பழத்தை நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதில் அரை டம்ளர் அளவு அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தேங்காய் பால் இது இரண்டும் கிடைக்காத பட்சத்தில் சாதாரண தண்ணீரை ஊற்றி கூட நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி ஷவர் கேப் போட்டு அரைமணி நேரம் விட்டு விட வேண்டும். அரை மணி நேரம் கழித்து எப்பொழுதும் போல் ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்து விடலாம்.
இப்படி நாம் செய்வதன் மூலம் நம்முடைய தலைமுடி உதிர்தல் பிரச்சினை என்பது குறைய ஆரம்பிக்கும். முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். இதோடு மட்டுமல்லாமல் பட்டு போன்ற மிருவான கூந்தலையும் நம்மால் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: ஒரே வாரத்தில் முடி உதிர்வு குறைய
உடல் குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பாதாம் பிசினை இந்த முறையில் இரண்டு முறை பயன்படுத்தினாலே உங்களுடைய முடி வளர்ச்சியில் இருக்கக்கூடிய வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். முயற்சி செய்து பாருங்கள்.